“நினைத்தேன் வந்தாய்ன்னு உன்னை தான் நான் சொல்ல முடியும் ஷ்யாம். உங்கப்பா வரனும்னு நான் தவம் இருந்தா கூட அவர் என் முன்னாடி வந்து காட்சி தரது சந்தேகம் தான்!”
“அப்பா மட்டுமா என்ன, நீங்களும் அப்படியே தான்... அப்பாவை கேட்டா அவரும் கூட உங்களை பத்தி இப்படியே தான் சொல்வார்... ரெண்டு பேரும் பிஸி பீ டாக்டர்ஸ்...”
“என்ன ஆனாலும் உன் அப்பாவை விட்டுக் கொடுக்க மாட்டீயே... சரி வா, ரேஷ்மியும், ராகவியும் கார் பக்கத்துல இருக்கேன்னு சொன்னாங்க... ரேஷ்மிக்கு விஷ் பண்ணிட்டு கிளம்பலாம்...”
ரேஷ்மியின் பெயர் காதில் ஒலித்ததுமே ஷ்யாமின் கண்களில் ஸ்பெஷல் நட்சத்திரங்கள் மின்னியது! அதை அம்மாவிற்கு தெரியாமல் மறைக்க முயற்சி செய்துக் கொண்டே, “அதான் ஸ்டேஜ்லேயே ரெண்டு பேரும் அப்படி செல்லம் கொஞ்சுனீங்களே... இன்னும் என்ன தனியா விஷ் செய்ய வேண்டி இருக்கு,” என்றான்!
“விஷ் செய்ய போறது நான் இல்ல ஷ்யாம்... நீ,” என்றாள் ஹேமா!
“நானா?”
“ஆமாம், நீ தான்... என்ன தான் நீ ஸ்மார்ட்னாலும், நீ காலேஜ் தர்ட் தான்... ரேஷூ ஃபர்ஸ்ட் வந்திருக்காளே, விஷ் செய்,” என்றாள் ஹேமா சீண்டும் விதத்தில்!
நடந்தபடியே ஹேமாவின் பக்கம் பார்த்த ஷ்யாம்,
“ரேங்க் எல்லாம் முக்கியமில்லை... ஹானஸ்டி & சின்சியாரிட்டி தான் முக்கியம்னு எனக்கு கதை சொன்ன என் அம்மா தானா நீங்க???” என்றான் போலியான கோபத்துடன்!
ஹேமா மீண்டும் சிரித்தாள்...!
“நானே தான்... ஆனால் அது அன்னைக்கு, இது இன்னைக்கு...”