இருந்தது!
ஏற்றுக் கொள்பவனாக மெல்ல தலை அசைத்தான் மித்ரன்.
இரண்டு நிமிடங்களில் அந்த அறைக்குள் வந்த சரண்யா மற்ற நாட்களை விட அதிகமாக சோர்ந்து போய் தெரிந்தாள்...
அவளிடம் இருந்த மாற்றம் மித்ரன், மைத்ரேயி இருவருக்குமே தெரிந்தது... இருவருக்குமே ‘ஏன்’ என்ற கேள்வி எழுந்தது...
ஆனால் இரண்டுப் பேருமே உடனடியாக எதுவும் கேட்கவில்லை...
சுரத்தே இல்லாமல், “குட் மார்னிங் மேடம்...” என்றாள் சரண்யா.
அவளுக்கு பதிலாக ஒரு ஸ்மைலை கொடுத்து விட்டு, மித்ரன் நின்றிருந்த பக்கம் பார்த்தாள் மைத்ரேயி...
மைத்ரேயிக்கு நேர் எதிரே இருந்த சுவரில் சாய்ந்த படி நின்றிருந்த மித்ரனை அதுவரை கவனிக்காமல் இருந்த சரண்யா, மைத்ரேயியின் பார்வையை கவனித்து திரும்பி பார்த்தாள்...
மித்ரனை அங்கே பார்த்து திகைத்துப் போனாள்...
இப்போது என்ன??? என்ற கேள்வியுடனே... இவன் இருக்கும் போது எதற்கு மைத்ரேயி அவளை இங்கே வர சொன்னாள் என்றும் புரியாமல், குழப்பத்துடன் மைத்ரேயியை பார்த்தாள் சரண்யா...
மைத்ரேயி எனக்கு தெரியாது என்று சொல்வதை போல தலையை அசைக்க, குழப்பமும், கேள்வியுமாக மீண்டும் மித்ரனின் பக்கம் பார்த்தாள் சரண்யா...
நின்றிருந்த இடத்தில் இருந்து நடந்து சரண்யாவின் அருகே வந்த மித்ரன்,