மைத்ரேயியின் அறைக் கதவு திறந்து தான் இருந்தது... அவள் யாரோ ஒரு பெண்ணிடம் எதை பற்றியோ திவீரமாக பேசிக் கொண்டிருந்தாள்...
சொல்லாமல் கொள்ளாமல் திடீரென வந்து நின்ற மித்ரனை பார்த்து மைத்ரேயிக்கு ஆச்சர்யமாக இருந்தது...
அவள் அண்ணனை கேள்வியாக பார்க்க,
“நத்திங் அர்ஜன்ட் மைத்தி... நீ வேலையை முடி,” என்றான் மித்ரன்.
அதை ஏற்றுக் கொண்டு மைத்ரேயி தன் உரையாடலை தொடர, மித்ரன் அந்த அறையிலேயே இலக்கின்றி உலாவிக் கொண்டிருந்தான்...
அன்றுக் காலை முதலே அவனின் மனதில் இருந்த பரபரப்பு இப்போது பல மடங்காகி விட்டது போன்ற உணர்வு அவனுக்கு இருந்தது...
“அண்ணா....!!!!” சற்றே உரக்க ஒலித்த மைத்ரேயியின் குரலில் திடுக்கிட்டு திரும்பி பார்த்த மித்ரன், மைத்ரேயி அவனுக்கு பக்கத்தில் நிற்பதைக் கண்டான்... அவளுடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணை இப்போது அங்கே காணோம்! அவள் அறையை விட்டு சென்றது கூடவா அவனின் கவனத்தில் படவில்லை, என்று யோசித்துக் கொண்டே,
“இவ்வளவு பக்கத்தில நின்னுட்டு ஏன் கத்துற மைத்தி... மெதுவா கூப்பிட்டா போதாதா?” என்றான்!
அந்த கேள்வியை கோபம் இல்லாமல் அவன் சொன்ன தோரணையில், சிறு வயது அண்ணன் நினைவு வர, மைத்ரேயியின் முகத்தில் சின்ன புன்னகை எட்டிப் பார்த்தது!
“ஏன் சொல்ல மாட்ட... உன்னை ஒரு பத்து தடவை கூப்பிட்டேன்... நீ ஏதோ பெரிய கோட்டையை பிடிக்க யோசனையில இருந்த போலிருக்கு... உனக்கு சுத்தமா கேட்கவே