இல்லை... எதுக்கும் ஒரு நல்ல ஈஎன்டி ஸ்பெஷலிஸ்ட்ட போய் பாரு...”
அப்படி காது கேட்காமலா இருந்தான்...? மெல்லியதாக சங்கோஜம் தோன்ற, அதை தங்கைக்கு தெரியாமல் மறைத்த படி,
“நான் ஏதோ யோசிச்சுட்டு இருந்தேன்...” என்று சொல்லி மழுப்பினான்.
“யோசிச்சா காது கேக்காதா??? இந்த கதை புதுசா இருக்கே... ஒருவேளை நீ நேத்து வீட்டுக்கு வந்து சேர்ந்தப்போ இருந்த நிலைமையோட எஃபக்ட்டோ என்னவோ!!!”
மித்ரனால் அவனின் தங்கையை மெச்சாமல் இருக்க முடியவில்லை!
திட்டாமல், அறிவுரை என்று தொடங்காமல், பேச்சின் நடுவே இப்படி இயல்பாக சுட்டிக் காண்பிக்க எத்தனை பேரால் முடியும்!!!!
ஆனாலும் அந்த பேச்சை தொடர மனம் இல்லாமல், “நான் சரண்யாவை பார்க்கனும் மைத்தி,” என்றான் மித்ரன்.
மைத்ரேயியின் முகத்தில் அதுவரை இருந்த ‘என் அண்ணன்’ எனும் இளக்கம் போய் அமர்த்தலான பாவம் வந்து சேர்ந்தது!
“எதுக்கு...?” எனும் கேள்வியை அவள் கேட்ட போது, இது வேண்டாத வேலை போய் விடு என்ற செய்தி நேரடியாகவே இருந்தது...
தன் தங்கை வளர்ந்து விட்டாள்... என மனதினுள் நினைத்துக் கொண்ட மித்ரன்,
“நான் அவக் கிட்ட பேசனும் மைத்தி... வேற எங்கே போய் பேச சொல்லு,” என்றான் அமைதியாக.
அது எதுவும் மைத்ரேயியை மாற்றி விட வில்லை... அண்ணனை சந்தேகமாக பார்த்தபடி,