(Reading time: 8 - 15 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”பாரு ஜனனி எவ்ளோ அடிபட்டிருக்குன்னு” என காட்ட சிவாவோ தலையில் அடித்துக் கொண்டான்

   

”அவளை டாக்டரா பார்த்துத் தொலைடா பாவி, என்னால தாங்க முடியலை” என புலம்ப ஜனனியோ

   

”ஷ் சும்மாயிருங்க, தில்லையே பாவம் அவரை போய் திட்டிக்கிட்டு” என சொல்லியவள் தில்லையை நெருங்கி அவனுக்கு காயம்பட்ட இடத்தில் கையை வைத்து

   

”ரொம்ப அடியா இருக்கே தில்லை, பார்த்து சண்டை போடக்கூடாதா” என அன்பாக பேச அவனிடம் பதிலே இல்லை, என்னவென அவனைப் பார்க்க அவனோ அவளையே ரசித்துப் பார்க்க அவளுக்கு வெட்கம் வந்தது, சிரித்தபடியே தலை குனிந்துக் கொள்ள அதைக் கண்ட சிவாவிற்கும் சம்யுக்தாவிற்கும் வெறுப்பே வந்தது

   

”டாக்டர் என்ன செய்றீங்க ட்ரீட்மென்ட் பாருங்க” என சம்யுக்தாவே சொல்லிவிட அதில் ஜனனியோ வியப்புடன் அவளைப் பார்த்து

   

”நீ யாரு” என கேட்க அவளோ

   

”நானா நான் சம்யுக்தா” என்றாள் கெத்தாக

   

”அதுசரி தில்லைக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்“

   

”எங்களுக்குளள் ஆயிரம் இருக்கும், அது எதுக்கு உங்களுக்கு, டாக்டரா உங்க கடமையை செய்ங்க சீக்கிரம்” என ஜனனியை அதட்ட அதில் அவளே அசந்துவிட்டாள் சிவாவும்தான் ஆச்சர்யப்பட்டான், தில்லையோ சம்யுக்தாவிடம் கோபித்துக் கொண்டான்

   

”இப்ப எதுக்கு ஜனனியை அதட்டற, அமைதியா இரு” என கோபமாக திட்ட அதில் சம்யுக்தா முகத்தை திருப்பிக் கொண்டாள். உடனே தில்லையோ ஜனனியிடம்

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.