தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 07 - பிந்து வினோத்
This is a Chillzee Originals - Princess Novel episode.
- Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
- Visit Chillzee Princess Novels page for other current Chillzee Princess stories.
ரோஹினியின் கொண்டையை பிரித்து, மெல்ல மென்மையாக சீப்பால் சீவி, அழகாக தலை பின்னி விட்டாள் சாரதா!!!!
ரோஹினியின் இடை வரை நீண்ட ஜடை அவளின் அழகை மெருகேற்றியது!
“அழகா இருக்குடா ரோஹினிம்மா,“ என்ற சாரதாவிற்கு, புது ஐடியா தோன்றவும்,
“ட்ராவல் செய்துட்டு வந்தீயே, கொஞ்சமா உடம்புக்கு வெந்நீர் வச்சு குளிச்சு, வேற ட்ரஸ் மாத்றேன்னா மாத்துடா... நான் உனக்கு பூ ரெடி செய்து வைக்குறேன்,” என்றாள் சாரதா உற்சாகத்துடன்!
ரோஹினிக்கு சாரதாவின் உற்சாகம் ஆச்சர்யத்தை கொடுத்தது! அவளின் மேல் இருந்த மரியாதை இன்னும் அதிகமானது!
அந்த வீட்டிற்கு வந்தது முதல் அங்கிருந்த வசதிகளால் தன் மனதில் ஏற்பட்டிருந்த சஞ்சலங்கள் சாரதாவின் உற்சாகத்தை தாக்கப் படுத்தி விடக் கூடாது என்ற எண்ணம் எழவும், அவை அனைத்தையும் பின்னே தள்ளி விட்டு விட்டு... வாய் திறந்து எதுவும் சொல்லாமல் சரி என்ற அர்த்தத்தில் தலை அசைத்தாள் ரோஹினி.
சிறுக் குழந்தை போன்ற ரோஹினியின் செய்கை மனதை மயக்க, அவளின் கன்னத்தை செல்லமாக கிள்ளிய சாரதா, “வாடா, நான் உனக்கு எப்படி ஹீட்டர் யூஸ் செய்யனும்னு காட்டுறேன்,” என்றாள் அதே உற்சாகத்துடன்!
சாரதாவின் செல்லம் கொஞ்சலில் மனம் இன்னும் அமைதியாக, மீண்டும் சரி என தலை அசைத்தாள் ரோஹினி!
சொன்னதுப் போலவே சாரதா சொன்னவற்றை கவனமாக கவனித்துக் கொண்டாள்! புது டவல் ஒன்றை கொடுத்து விட்டு சாரதா செல்ல, ரோஹினி சுற்றும் முற்றும் பார்த்தாள்! டைல்ஸ் சுவரை கொண்டிருந்த அந்த சின்ன குளியலறை சுத்தமாக தான் இருந்தது! ஆனால் ரோஹினிக்கு பழக்கமான குளியலறைக்கு பக்கத்தில் இது ‘மைன்யூட்’ ஆக தான் இருந்தது!