(Reading time: 6 - 12 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 38 - சசிரேகா

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

டுத்து ஜனனியோ தில்லையிடம்

   

”வேற எங்க வலின்னு சொன்னாதானே மருந்து வைக்கறதுக்கு”

   

“சொல்றதுக்கு கூச்சமா இருக்கு, சம்யுக்தா வேற இருக்கா என்ன செய்றது” என சொல்ல உடனே சம்யுக்தாவே அவ்விடம் விட்டு வெளியேறினாள். அவள் சென்றதும் தில்லையும் நிம்மதியாகி ஜனனியிடம்

   

”ஜனனி நான் நல்லாதான் இருக்கேன், வைத்தியம் பண்ணது போதும், இப்ப நான் கேட்கறேன் உண்மையை சொல்லு நீ சந்தோஷமாதானே இருக்க”

   

”உன்கூட இருந்தா சந்தோஷமா இருப்பேன், சிவாகூட இருக்கறதால நிம்மதியா இருக்கேன்”

   

”சாரி ஜனனி என் நிலைமை அப்படி, உன்னை விடனும்னு நான் நினைக்கலை”

   

”அதுக்காக என்னை நீ விரும்பவும் இல்லையே”

   

”விரும்பறதுன்னா எனக்கு டைமே கிடைக்கலை ஜனனி, நான் உன்னை தேடி வர்றதுக்குள்ள என் வாழ்க்கையில பல விசயங்கள், பல பிரச்சனைகள், பல இழப்புகளை சந்திச்சிட்டேன் அது உனக்கே தெரியும்ல”

   

”தெரியும் அதனாலதான் உன்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, நீ சொன்னதுக்காக நான் சிவாவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் இல்லைன்னா இன்னிக்கு வரைக்கும் நான் உனக்காகவே காத்திருந்திருப்பேன் தில்லை”

   

”எனக்குத் தெரியும்”

   

”இப்ப நான் ஒரு கேள்வி கேட்கறேன், உண்மையை சொல்றியா““

   

”கேளு”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.