”எனக்கு எதுவும் புரிய வேணாம், கல்யாணம் நின்னதால என் அப்பாவுக்கு ஏற்பட்ட நிலைமை, எனக்கு ஏற்பட்ட அவமானம், இதுக்கெல்லாம் காரணமான தில்லை எனக்கு நியாயம் வழங்காம நான் விடமாட்டேன், கண்டிப்பா தில்லை என் அப்பாகிட்ட வந்து மன்னிப்பு கேட்கனும்”
”தில்லை இந்த ஊரை தாண்டினா அவன் உயிருக்கு ஆபத்து“
”எனக்கு அதைப்பத்தி கவலையில்லை, அவன் என்ன நல்லவனா கெட்டவன்தானே செத்தா சாகட்டுமே”
“வேணாம் அப்படி பேசாத சம்யுக்தா” என கோபத்தில் சொல்லிய ஜனனி உடனே அமைதியாகி அவளையே ஏற இறங்கப் பார்த்தாள். சம்யுக்தா கையில் இருக்கும் தாலியைக் கண்டு சிரித்தாள்
”எதுக்கு சிரிக்கறீங்க“
”தாலியோட வந்திருக்க”
”ஆமாம் தில்லை செஞ்ச அநியாயத்துக்கு நியாயம் கேட்க வந்தேன்”
”அதுக்கு தாலியோடவா, யாராவது பார்த்தா தப்பா நினைக்க மாட்டாங்களா”
”யார் என்ன நினைச்சாலும் எனக்கு கவலையில்லை, எனக்கு நியாயம் வேணும்”
”தில்லையால மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது, அதுக்குப்பதிலா வேற ஏதாவது நியாயம் கேளு செய்வான்”
”வேறயா வேற என்ன”
”அதை நீதான் முடிவெடுக்கனும், முதல்ல உன் அப்பாவை போய் பாரு”