”நீ என்னை என்னிக்காவது விரும்பியிருக்கியா, நான் உன் தோழி, நமக்குள்ள இருக்கற நட்பை கடந்து எப்பவாவது என்னை உன்னோட காதலியா மனைவியா நினைச்சிருக்கியா” என கேட்க அவனிடம் பதில் இல்லை, மௌனமாக இருந்தான், அந்த மௌனமே பதில் என எண்ணி கண்கள் கலங்கியவள்
”நீ படுத்துக்க, உனக்கு நான் இன்ஜக்ஷன் போட்டிருக்கேன் அதனால வலி குறையும், தூக்கம் வரும், நீ தூங்கினாதான் உடம்பு சரியாகும்”
”எனக்கு வேலையிருக்கு ஜனனி, நான் கிளம்பறேன்”
”ப்ளீஸ் தில்லை எனக்காக இரு ப்ளீஸ்” என சொல்ல அதற்கு மேல் அவனால் எதுவும் பேச முடியாமல் படுத்து உறங்கலானான்.
அவன் உறங்குவதைக் கண்டு ஜனனியும் அறையை விட்டு வெளியேறிச் சென்றாள்.
அங்கிருந்த சம்யுக்தாவிடம் சிரித்தபடியே சென்று பேச்சுக் கொடுத்தாள்
”அப்புறம் சம்யுக்தா எப்படி ஒரு ரௌடி பயலோட இத்தனை நாள் இருந்திருக்க, உனக்கு கஷ்டமாயில்லை”
”எப்படி உங்களால ஒரு தாதாவை விரும்ப முடிஞ்சது”
”புரியலை”
“நீங்களும் தில்லையும் பேசினதை கேட்டேன், நீங்க அவரை லவ் பண்ணீங்களா”
”அதுவா ப்ச் அது அப்ப, ஒரு காலத்தில இன்னும் சொல்லனும்னா நான்தான் லவ் பண்ணேன், என்னோடது ஒரு தலைகாதல், கடைசியில என் காதல் தில்லைக்கு தெரிஞ்சும் அவனால என்னை ஏத்துக்க முடியலை, என் காதலை மதிச்சான் அதனால அவன் உயிர் நண்பனுக்கு