படிக்கறவரைக்கும் அவன் செய்யாத அட்டூழியமே இல்லை, கூட படிக்கற பொண்ணுல இருந்து அங்க பாடம் எடுக்கற பெண் டீச்சர்கள் வரை டார்ச்சர் பண்ணியிருக்கான், ஒரு முறை என்கிட்ட கூட வந்தான், நான் தில்லைகிட்ட சொன்னதும் தில்லை இளங்கோவை அவனோட ஸ்டைல்ல கவனிச்சான், அதோட இளங்கோ அமைதியானான். அதுக்கப்புறம் படிப்பு முடிஞ்சதும் ஆளுக்கொரு பக்கமா போயிட்டோம்
ஆனாலும் இளங்கோ மோசமானவன், இலவச வைத்தியம்னு சொல்லி பல இளம் பெண்களை தன்கிட்ட வரவழைச்சி வைத்தியங்கற பேர்ல தப்பா நடந்துக்கிட்டு இருக்கான், வீடியோ எடுக்கறது அதை வைச்சி மிரட்டி பணம் சம்பாதிக்கறது இதெல்லாம் அவன் செய்றது.
இதனாலதான் தில்லை உன்னை காப்பாத்த நினைச்சி கல்யாணத்தை நிறுத்தினான். உண்மையை சொன்னா தில்லைக்கே இந்த விசயம் கடைசி நாள்லதான் தெரிஞ்சது, முன்னாடியே தெரிஞ்சிருந்தா கல்யாண மண்டபம் வரைக்கும் இந்த விசயம் வந்திருக்காது, உனக்கும் இந்த நிலைமை வந்திருக்காது காலம், கடந்தாலும் அவன் உன்னை காப்பாத்தியிருக்கான் அதை நீ நினைச்சிப்பாரு”
”நீங்க சொல்ற கதையை நான் நம்பனுமா, இப்படி சொல்லச் சொல்லி தில்லை சொன்னானா, நீங்க இப்படி சொன்னா நான் உடனே நம்பி இங்கிருந்து போயிடுவேன்னு நினைச்சீங்களா, முடியாது, இளங்கோவை பத்தி எனக்கு பெரிசா தெரியாது ஆனா, தில்லை செஞ்ச காரியத்தால என் அப்பாவோட உடல் நிலை மோசமாச்சி தெரியுமா உங்களுக்கு”
”தெரியும் அவருக்கு வைத்தியம் பார்த்தது கூட என் நண்பன்தான், நான்தான் அவனை அனுப்பி வைச்சேன்”
”நீங்க ஒரு டாக்டரா இல்லை தில்லையோட கூட்டு சேர்ந்து பல பேரோட வாழ்க்கையை கெடுக்க நினைக்கறீங்களா”
”இப்ப நீ கோபத்தில இருக்க, கோபம் உன் கண்ணை மறைக்குது, கண்முன்னாடி தெரியற உண்மையை நீ புரிஞ்சிக்காம இருக்க, அமைதியா யோசி உனக்கே எல்லாம் புரியும்“