(Reading time: 6 - 12 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

என்னை கல்யாணம் செஞ்சி வைச்சான்”

   

”அவன் யாரு உங்களுக்கு இதையெல்லாம் செய்றதுக்கு”

   

”தில்லை தாதா ஆகறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு நல்ல நண்பனா இருந்தான். இப்பவும் நாங்க நண்பர்கள்தான்”

   

”பொய், தில்லை ஒரு கெட்டவன், மோசமானவன்”

   

”இல்லை அவனை விட நல்லவனை உன்னால எங்கயும் தேடி கண்டுபிடிக்க முடியாது“

   

”அவன் எத்தனை பேரை கொன்னிருக்கான்னு தெரியுமா உங்களுக்கு”

   

”அவ்வளவு பேரும் கெட்டவங்கதானே“

   

”இருந்தாலும் இவன் யாரு அவங்களைத் தண்டிக்கறதுக்கு”

   

”உன்னோட இந்த கேள்விக்கு பதில் காலமே தரும், முதல்ல நீ எதுக்காக தில்லையோட இருக்க, அவனோட உயிரே ஆபத்துல இருக்கு, இன்னிக்கோ நாளைக்கோ எதிரிகளாலயோ போலீசாலயோ அவனுக்கு ஆபத்து வரும், அவன்கூட இருந்தா உனக்கும் ஆபத்து வரும் அவனை விட்டு போறதுதான் உனக்கு நல்லது” என அறிவுரை சொல்ல அதற்கு சம்யுக்தாவோ

   

”என் கதை உங்களுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன், தெரிஞ்சா என்கிட்ட இப்படி பேசியிருக்க மாட்டீங்க, தில்லையை திட்டியிருப்பீங்க”

   

”உன் கதை எனக்குத் தெரியும் சம்யுக்தா, உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போற இளங்கோவனையும் எனக்குத் தெரியும், அவன் நல்லவன் இல்லை, நான் படிச்ச காலேஜ்லதான் அவனும் டாக்டருக்கு படிச்சான், காலேஜ்ல அவன் எப்படியிருப்பான்னு தெரியுமா, தில்லையே நல்லவன்னு சொல்ற அளவுக்கு இளங்கோ அவ்ளோ நல்லவன் கிடையாது 

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.