Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 12 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சுபாஷினி மற்றும் ஜோதியை அழைத்துக் கொண்டு அவர்கள் விரும்பிய கடைகள் இருந்த அவனுக்கு சொந்தமான மாலிற்கு வந்து சேர்ந்தான் ஆகாஷ்.
சுபாஷினியும், ஜோதியும் தங்களுக்குள் பேசிக் கொண்டே பொறுமையாக கிஃப்ட் தேடவும், ஆகாஷிற்கு போரடிக்க ஆரம்பித்தது.
எனவே சுபாஷினியிடம், “அம்மா, நீங்களும் ஆன்ட்டியும் வேண்டியதை வாங்கி முடிச்சிட்டு என்னை ஃபோன்ல கூப்பிடுங்க. நான் மாலை சும்மா சுத்தி பார்த்துட்டு வரேன்,” என்றான்
“சாரி ஆகாஷ், அதுக்குள்ளே போரடிக்க ஆரம்பிச்சிடுச்சா???” என மகனிடம் சொன்ன சுபாஷினி, தோழியிடம், “ஜோதி, இதுக்கு தான் உன்னை அக்ஷராவையும் கூட அழைச்சிட்டு வர சொன்னேன்,” என அலுத்துக் கொண்டாள்!
“நான் என்ன செய்ய சுபா, அவளை ஒரு இடத்துல பிடிச்சி நிறுத்தி வைக்க என்னால முடியலைப்பா. கூட வான்னு சொன்னா, சுபா ஆன்ட்டி ஒன்னும் சொல்ல மாட்டாங்க நான் அவங்க கிட்ட சொல்லிக்குறேன்னு சொல்றா... நான் என்ன செய்ய,” என்றாள் ஜோதி!
“சின்ன பொண்ணு தான அப்படி தான் இருப்பா... நீ ஆகாஷ் வரான்னு சொல்ல வேண்டியது தானே?”
“க்கும்... சின்ன பொண்ணா அவ!!! எல்லோரும் கல்யாணம் செய்துட்டு அம்மா வீட்டுல இருந்து மாமியார் வீட்டுக்கு போவாங்களாம், அவ மட்டும் தான் கல்யாணம் செய்துட்டு மாமியார் வீட்டுல இருந்து அம்மா வீட்டுக்கு போக போறாளாம்... எப்போ பாரு இதையே தான் என் கிட்ட சொல்லிட்டே இருக்கா... அவளை போய் நீ சின்ன பொண்ணுன்னு சொல்ற...”
“சரி, அவ சொல்லிட்டு போகட்டும்... இனிமேல் நீ, ஆமாம் ஆகாஷ் தான் என் பையன்னு சொல்லிக்கோ...”
தோழிகளின் உரையாடல் தொடர்ந்துக் கொண்டே செல்ல, “அம்மா,” என இழுத்தான் ஆகாஷ்.