(Reading time: 8 - 16 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

   

“பாருங்க, நீங்க ஸ்மார்ட் என்கிறதால தான் இப்படி கேட்டு தெரிஞ்சுக்குறீங்க,” என கூசாமல் ஆகாஷிற்கு ஒரு கூடை ஐஸை தலையில் வைத்தாள்!

   

அதை புரிந்துக் கொண்டவனாக இதழ்களில் சின்ன புன்சிரிப்புடன், கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு அமைதியாக நின்று ‘சொல்ல வந்ததை சொல்லி முடி’ என்பது போல அவளை பார்த்தான் ஆகாஷ்!

   

“நான் லூசுன்னு சொன்னது உங்களை தான் சார்... ஆனால் அது நீங்க நினைக்குற மாதிரி இல்லை...”

   

இப்போது மஹாலக்ஷ்மியும் கூட சினேகா என்ன தான் சொல்ல வருகிறாள் என புரியாமல் விழித்தபடி அவளை பார்த்தாள்! சினேகா அது எதையும் கண்டுக்கொள்ளாமல் பேச்சை தொடர்ந்தாள்!

   

“லூசு ன்றது உங்களை பார்த்து ரொம்ப ஆச்சர்யப்பட்டுப் போய் நான் உங்களுக்காக வச்சிருக்க நிக் நேம் சார்...”

   

‘ஆனாலும் இவளுக்கு கொழுப்பு அதிகம் தான்...’ என்ற யோசனையுடன் ஆகாஷ் கடுப்பாக ஒரு லுக் கொடுத்து விட்டு, எதுவோ பேச தொடங்கவும்...

   

அவனை பேச விடாமல், அவசரமாக குறுக்கிட்டு பேசினாள் சினேகா....

   

“முழுசா கேட்டுருங்க சார்... லூசுன்னா L O O S U...”

   

ஹாங்! எனக்கு ஸ்பெல்லிங் தெரியாது, என்று சொல்ல நினைத்த ஆகாஷ்... சினேகா என்ன தான் சொல்லி முடிக்கிறாள் என்று பார்ப்போமே என்று அமைதியாக இருந்தான்!

   

“இதுல L for logical...
O for optimistic

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.