நான் கொடுக்க போற பிளானை பார்த்து அசந்து போக போகுது...”
பேசுவது யார் என்பது ஆகாஷிற்கு உடனே புரிந்தது...! சினேகா!!!!
ஆனால் யாரை லூசு என்கிறாள்? அவளுடன் வேலை செய்யும் யாரையோ சொல்கிறாளோ?
காலி இடம் என்பதால் நடுவே இருந்த மாலின் சுவரை தாண்டி சில அடி எடுத்து வைத்ததுமே ஆகாஷால் அவளை பார்க்க முடிந்தது!
அங்கே சினேகா காற்றில் கைகளால் எதையோ அளந்த படி நின்றிருந்தாள்! அவளுக்கு பக்கத்தில் இன்னொரு பெண்ணும் இருந்தாள்!
தானாக முகத்தில் மலர்ச்சி தோன்ற, “ஹாய் சினேகா,” என்றான்!
ஆகாஷின் குரல் கேட்டு திரும்பிய சினேகாவின் முகத்தில் அதிர்ச்சி இருந்தது!!!
“சார்... ஆகாஷ் சார்... நீங்க இங்கே...”
எதற்காக இப்படி திணறுகிறாள் என்ற கேள்வியுடன், “சும்மா வந்தேன்,” என்ற ஆகாஷின் பார்வை சினேகாவின் பக்கத்தில் நின்ற பெண்ணிடம் சென்றது.
புரிந்துக் கொண்டு, மஹாலக்ஷ்மியை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் சினேகா.
“இவங்க மஹாலட்சுமி என்னோட ரூம்மேட் & க்ளோஸ் ஃப்ரென்ட்,” என்றவள், அப்படியே மஹாவிடம், “அக்கா, இவரு தான் ஆகாஷ், இந்த மாலோட ஓனர்,” என்றாள்!
“ஓ! நீ சொன்ன லூ...” என ஏதோ சொல்ல தொடங்கிய மஹாலக்ஷ்மியின் கையை அவசரமாக & ரகசியமாக தட்டினாள் சினேகா...
தவறை உணர்ந்தவளாய், “நீ... ரொம்ப புகழ்ந்து சொன்ன ஆகாஷ் இவர் தானா?” என சொல்லி அட்ஜஸ்ட் செய்த மஹா, ஆகாஷிடம், “உங்களை பத்தி சினேகா நிறைய சொன்னா சார்,”