என்று எக்ஸ்ட்ராவாக சொல்லி சமாளித்தாள்!
இருந்தாலும் ஆகாஷிற்கு சினேகா சொன்ன ‘லூசு’ யார் என்பது இப்போது ரொம்ப தெளிவாகவே புரிந்திருந்தது!!!!!
ஆகாஷ் பொதுவாக எல்லோருடனும் கலகலப்பாக பழகுபவன் இல்லை. அம்மா, அப்பாவுடன் மட்டும் அரட்டை அடிப்பான். மற்றபடி அக்ஷரா அவனுடன் கல கல என எப்போதும் பேசுவாள்.
இங்கே சினேகா அவனை தான் ‘லூசு’ என்று குறிப்பிட்டாள் என்பது தெரிந்த உடன் ஆகாஷிற்கு கோபம் பொங்கி வழிந்திருக்க வேண்டும்! ஆனால் அதற்கு மாறாக அவனுக்கு சிரிப்பு தான் வந்தது!
என்னையா கலாட்டா செய்கிறாய்! இரு இரு... என அதே ஜாலி மனநிலையில் யோசித்தவன்,
“சினேகா அப்படி ரொம்ப புகழ்ற அளவுக்கு எல்லாம் நான் இல்லை மஹாலக்ஷ்மி. நான் ஒரு சிம்பிள் பெர்சன்,” என்று புன்னகை மின்ன சொன்னான்.
அவனின் ‘ஓவர்’ தன்னடக்கத்தை கண்டு, சினேகாவும் மஹாலக்ஷ்மியும் சிரிப்பை அடக்க மிகவும் முயற்சி செய்தார்கள்!!
அதை கவனிக்காதது போல காட்டிக் கொண்ட ஆகாஷ்,
“உங்க சின்சியாரிட்டி எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு சினேகா! பிரபாகர் நெக்ஸ்ட் வீக் தான் உங்களோட சைட் விசிட் செய்ய போறேன்னு சொன்னார்... ஆனாலும் அதுக்கு முன்னாடி ப்ளான்க்கு ப்ரிபேர் செய்ய இங்கே வந்திருக்கீங்கன்னு புரியுது. ஐ அப்ரிஷியேட் இட்,” என்றான்.
ஆகாஷின் புகழ்ச்சி எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் எனர்ஜி கொடுக்க, வாயெல்லாம் பல்லாக,
“இதெல்லாம் நான் எப்போவும் செய்றது தான் ஆகாஷ் சார்... நான் உங்க கிட்ட அப்போவே சொன்னேனே, இது எனக்கு ஒரு பெரிய அசைன்மென்ட்,” என்றாள் சினேகா.