(Reading time: 8 - 16 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

“ஓஹோ! உன்னை மறந்துட்டோம் பாரு... நீ போயிட்டு வா ஆகாஷ்... நான் உனக்கு கால் செய்றேன்,” என்றாள் சுபாஷினி.

   

விட்டால் போதும் என்று இருவரிடமும் விடைப் பெற்று அந்த ஆடம்பர கடையை விட்டு வெளியே வந்தான் ஆகாஷ். என்ன செய்வது என்ற கேள்வியுடன் அந்த மாலை சுற்றி பார்வையை ஓட்டினான்.

   

பெரியவர்கள், சிறியவர்கள், குழந்தைகள் என எல்லா விதமான மனிதர்களும் கண்ணில் பட்டார்கள்.

   

அவனின் உழைப்பில் உருவான முதல் venture இது.

   

எப்போதுமே அவனின் மனதிற்கு மிகவும் நெருக்கமனாதும் கூட...

   

எந்த பந்தாவும் இல்லாமல் சாதாரணமாக சுற்றி பார்த்தபடி நடந்தவனுக்கு அங்கே அவன் கட்ட திட்டமிட்டிருந்த மல்டி லெவல் பார்க்கிங் இடம் பற்றிய ஞாபகம் வந்தது.

   

சினேகா தயார் செய்யும் ப்ளான் சரியாக இருக்கிறதா என்று தெரிந்துக் கொள்ள அவனும் ஒருமுறை அந்த இடத்தை பார்த்து வைப்பது நல்லது என்று முடிவு செய்து பார்க்கிங் கட்ட அவன் தேர்ந்தெடுத்திருந்த இடத்திற்கு வந்தான்.

   

அது வெறும் காலி கிரவுன்ட்! அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பொருட்கள் இருந்தது!

   

ஏற்கனவே இருக்கும் பார்க்கிங் கார்களால் நிரம்பி வழிவதால் கூடுதல் பார்க்கிங் அவசியம். இந்த இடத்தை தவிர புது பார்க்கிங்கிற்கு வசதியான இடம் வேறு எதுவும் இல்லை!

   

யோசனையுடன் நின்ற ஆகாஷின் காதில் பக்கத்தில் எங்கிருந்தோ வந்த மெல்லிய பேச்சு சத்தம் கேட்டது.

   

“...ல் சூப்பரா இருக்கும்லக்கா. என் ப்ளான் சூப்பர் ஹிட் ஆக போகுது பாருங்க... அந்த லூசு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.