(Reading time: 8 - 16 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

“ஐ னோ... இந்த பார்க்கிங் லாட் அசைன்மென்ட் சரியான கைல தான் இருக்குன்னு இப்போ எனக்கு நம்பிக்கை வந்திருக்கு... ஆல் தி பெஸ்ட்!”

   

“தேங்க்ஸ் சார்... உங்களுக்கு பிடிச்ச மாதிரி கட்டாயம் ப்ளான் ப்ரிபேர் செய்து தரேன் சார்... இன்ஃபாக்ட் அதை பத்தி தான் நீங்க வந்தப்போ என் ஃப்ரென்ட் கிட்ட சொல்லிட்டு இருந்தேன் சார்...”

   

“கூல்... கூல்...! எனக்கு அசைன்மென்ட் முடிச்சு தரதை பத்தியா பேசிட்டு இருந்தீங்க? அப்போ அசைன்மென்ட் கூடவே... அதென்ன என்னவோ லூசுன்னு என் காதுல விழுந்தது?"

   

முகத்தை அமைதியாக வைத்துக் கொண்டு ஆகாஷ் கேட்ட அந்தக் கேள்வி, ஒரே ஒரு வினாடி சினேகாவை திகைத்து நிற்க வைத்தது! ஆனாலும் உடனே சமாளித்துக் கொண்டு, 

   

"அது அப்படி இல்ல சார், அதுக்கு பின்னால வேற ரீசன் இருக்கு," என்றாள் மிகவும் மென்மையான + இனிமையான தோரணையில்!

   

சினேகா ஏதோ கதை சொல்ல போகிறாள் என்பது புரிந்தாலும், அப்படி என்ன தான் சொல்ல போகிறாள் என்பதை தெரிந்துக் கொள்ளும் ஆவலுடன், 

   

"அதென்ன ரீசன்?" என்று கண்கள் மின்ன கேட்டான் ஆகாஷ்.

   

அதற்குள் நன்றாகவே தன்னை சமாளித்துக் கொண்டிருந்த சினேகா, ஃபுல் ஃபார்மிற்கு வந்திருந்தாள்!

   

ஆகாஷின் காதில் ‘லூசு’ மட்டுமல்லாமல் அவள் சொன்ன முழு வாக்கியமும் விழுந்திருக்குமென யூகித்தவள், அதை வைத்து மின்னலென யோசித்து damage controlஐ தொடங்கினாள்!

   

“இதை தான் சார் பெரியவங்க கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்... தீர விசாரிப்பதே மெய்ன்னு சொல்லி இருக்காங்க!” என்று பெரிய ‘ப்ரிவியூ’ உடன் தொடங்கியவள்,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.