(Reading time: 7 - 14 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

வருஷமாச்சு... உனக்கு கட்டி தரேன் இரு,” என்றாள் அன்புடன்.

   

ரோஹினி இப்போதும் தலையை ஆட்டி விட்டு முன்பு கட்டிலில் அமர்ந்திருந்த அதே இடத்தில் அமர்ந்து சாரதாவை வேடிக்கைப் பார்த்தாள்.

   

சாரதாவின் கை விரல்கள் வெகு இயல்பாக மடிந்து, நிமிர்ந்து பூச்சரம் தொடுப்பதை பார்க்க அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

   

ரோஹினி பூச்சரங்களை பார்த்திருக்கிறாள்... ஆனால் அதை இப்படி தொடுப்பதை இப்போது தான் நேரடியாகப் பார்க்கிறாள்...

   

“அழகா செய்றீங்க...” என ரோஹினியே பேச, ஆச்சர்யத்துடன் நிமிர்ந்து பார்த்த சாரதா, அவளுக்கு பதில் சொல்ல மறுப்பாய் தலை அசைத்தாள்.

   

“ஏதோ கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் இருக்க மாதிரி செய்றேன் ரோஹினிம்மா... பொதுவா தேவைக்கு வாங்கியே பழக்கம் ஆயிடுச்சு...”

   

“நீங்களே தனியா இந்த ரூம் சுத்தம் செஞ்சீங்களா??”

   

“ஆமாம்டா... அதென்ன பெரிய வேலையா??”

   

“நான் உங்களுக்கு ரொம்ப தொல்லையா இருக்கேன்...”

  

“இதுல என்னடா தொல்லை??? அந்த பேச்சை விடு... உனக்கு இந்த சாரீ ரொம்ப அழகா இருக்கு... வரும் போது ஏன் வேற மாதிரி வந்த???”

  

“அது எங்க தீவோட ட்ரெடிஷனல் முறை...”

   

“ஓ... அது வித்தியாசமா இருந்துதுடா... இது எனக்கு தெரிஞ்ச மாதிரி இருக்கு...”

   

“எனக்கு ரெண்டுமே பழக்கம் தான்...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.