(Reading time: 7 - 14 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

முதல் முறையாக, வசதி குறைவை பற்றி யோசிக்காமல், சாரதா சொன்னது போல வெந்நீரை பயன்படுத்தி குளித்தாள்!

   

ரோஹினிக்குள் பல ரகமான எண்ணங்கள் ஓடியது! அவள் அரண்மனையை விட்டு வந்தது இந்நேரம் தெரிந்திருக்குமா??? அவளை தேட தொடங்கி இருப்பார்களா??? 

   

கேள்விகள் எழுந்தாலும், அவள் சென்னையில் இருப்பதை கண்டுப்பிடிப்பார்கள் என்று ரோஹினிக்கு தோன்றவில்லை! கலா வாய் திறந்து உண்மையை சொன்னால் தான் உண்டு! அது நடக்க வாய்ப்பே இல்லை! என்ன ஆனாலும் கலா ரோஹினி இருக்கு இடத்தை யாருக்கும் சொல்லவே மாட்டாள்!!! அந்த நம்பிக்கை ரோஹினிக்கு இருந்தது!

   

கலா மீது நன்றி பெருக, தான் இருக்கும் இடத்தை பற்றியும் யோசித்தாள் ரோஹினி!

   

சாரதாவின் வீட்டில் தங்கி இருப்பது அவளுக்கு மிக பெரிய வரம்!

   

தன் நிலைமை புரியவும், ரோஹினியின் மனமும் அதற்கு ஏற்ப தன்னை ஆயத்தப் படுத்திக் கொண்டது!

   

அரண்மனையை விட்டு வெளியே வருவது என்பது அவளாக எடுத்த முடிவு! ஒளிந்து வாழும் போது பாதுகாப்பான இடத்தில் இருப்பது தான் அவசியம்! வசதிகளை பற்றி இனி யோசிக்க கூடாது. இருக்கும் இடத்திற்கு ஏற்ப வாழ வேண்டும் என மனதினுள் முடிவு செய்துக் கொண்டாள் ரோஹினி!

   

குளித்து உடை மாற்றிய போது ரோஹினிக்குள் புத்துணர்வு வந்திருந்தது!

  

மீண்டும் அவள் முன்பிருந்த அதே அறைக்குள் செல்ல, அங்கே சாரதா ஒரு சின்ன பவுலில் இருந்த மல்லிகைப் பூவை கையில் எடுத்து, எடுத்து பூ கட்டிக் கொண்டிருந்தாள்!

  

ரோஹினி வந்த அரவம் உணர்ந்து நிமிர்ந்த சாரதா, இப்போது அவள் சாதரணமாக சேலை கட்டி இருப்பதை கவனிக்க தான் செய்தாள்! ஆனால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்து விட்டு, “எங்க தோட்டத்துல பூத்த பூ ரோஹினிம்மா! நான் பறிச்சே நிறைய 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.