(Reading time: 11 - 22 minutes)

ட்டில் சப்பாத்தி சப்ஜியை எடுத்து வைத்துவிட்டு  கிச்சனிற்குள் சென்ற தன் அம்மாவை யோசனையுடன் பார்த்தான் சந்துரு, குருமா மற்றும் அவனுக்கு பிடித்த பாசந்தியுடன் டைனிங் டேபிலுக்கு வந்தவர், அவன் தன்னையே பார்பதைக்கண்டு 

" என்னடா புதுசா பாக்கிற மாதிரி பாக்கற?" என்று கேட்க

" ம்ம்...... என்னவோ இன்னிக்கு டாலடிக்கறமா...ரொம்ப ஹேப்பியா வேற இருக்க போல, நான் வீட்டுக்கு வர்றப்ப யார்க்கிட்ட phone பேசிட்டு இருந்த , அதுல இருந்து தான் ஒரே ஹேப்பி மூட்...?,என்ன புது பாய் ஃப்ரெண்டா?" என்று கண்ணைச் சிமிட்டி கேட்டான்.

" அடி வாங்கப் போறடா..... ஃப்ரெண்ட் தான், சின்ன வயசு ஃப்ரெண்ட் ரொம்ப நாள் கழிச்சு பேசவும் ரொம்ப சந்தோஷமா இருக்குடா.." என்றார்

" என்னையும் introduce பண்ணிவைம்மா, அவங்களுக்கு பொண்ணு இருந்தா மட்டும்" என்றான்

" பாக்கலாம்,பாக்கலாம்..." என்ற நளினி  பொய்யாக கெத்துக்காட்ட, சந்துரு வாய்விட்டு சிரித்தான்.

சிரிக்கும் பொழுது தன் இறுக்கம் எல்லாம் கலைந்து , குறும்பு கண்ணனைப்போல் இருக்கும் தன் மகனைப் பார்த்தார்.. அவன் ஒற்றைப் புருவத்தை ஏற்றி 'என்ன' வென்று கேட்கவும்., எதைக் கேட்டால் அவன் தன் கூட்டுக்குள் செல்வானோ, அதைத் தன்னை மீறி கேட்டு விட்டார்
" பிரபு...நீ எல்லார்க்கிட்டயும் இப்படி சந்தோசமா இயல்பா இருந்தா என்னடா?..உன்ன சுத்தி ஒரு இரும்பு திறையை, நீயே ஏன்டா போட்டுக்கிற ?..ரொம்ப கஷ்டமா இருக்குடா.." சொல்லும் போதே அவரின் கண்கள் கலங்கியது..

கேள்வியின் விளைவாக அவன் சிரிப்பு துணி கொண்டு துடைத்தாற் போல காணாமல் போனது, கைகளையும், கண்களையும் இறுக மூடி தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவந்து ,கண்களை திறந்தவன், தன் அம்மாவின் கண்களை நேராகப் பார்த்து 
" இந்த கேள்விக்கான பதில் உனக்கு தெரியும்மா..உனக்கு மட்டும் தான் தெரியும்.." என்றவனின் குரலில் அடக்கப்பட்ட கோபம் தெரிந்தது. சொன்ன வேகத்தில் அங்கிருந்து சென்று தனது அறைக்குள் நுழைந்து கதவை 'படார்' என அறைந்து சாத்தினான்.

"ன்னது பதில் தெரியுமா..? ப்ளீஸ் சொல்லேன் அனு.." கெஞ்சாத குறையாக கேட்டாள் காவ்யா (fresher)
" sure.. ஆனா சொல்றதுக்கு முன்னாடி ஓடிப் போய் எனக்கு ஒரு சப்பாத்தி எடுத்துட்டு வருவியாம்..."மிடுக்குடன் ப்ளேட்டை நீட்ட...வேறு வழியில்லாமல் வாய்க்குள் திட்டிக்கொண்டே போய் எடுத்து வந்தாள்.." இப்பயாவது சொல்லேன்டா...?"என்றாள் காவ்யா

"ஓ.கே..இப்ப என்ன, இந்த காலேஜோட டாப் டெரர் சீனீயர்ஸ் யாருன்னு தெரியனும்..அதான?" அனு

"ம்." காவ்யா

அனு குரலை ரகசியமாக்கி " நோட் பண்ணிக்கோங்க ஃபிரண்ட்ஸ், சந்துரு@சந்திரபரகாஷ், ப்ரேம்@பிரேம்நாத், சுபி@சுபத்ரா..last but not least அனு@அனுக்ரகா.." என்றாள், எல்லோரும் விழிக்கவும்,
"அட future-ல வரப் போறத இப்பவே சொன்னேன்..தப்பா..."என்றாள்
"உன் அளப்பறை தாங்கலை அனு..சரி மேட்டருக்கு வா... ஏன் அவங்கள டெரர்னு சொல்ராங்களாம்? இது சுஜா

"ஏன்னா இதுல ஒருத்தர் பேசியே கொல்லுவாராம்,ஒருத்தர் பேசாம கொல்லுவாராம்..! வெய்ட்,வெய்ட் நோ மோர் கொஸ்டின்ஸ்.. எல்லாத்தையும் நானே சொல்லிறேன்" ஏதோ சி.ஐ.டி ரிப்போர்ட் வாசிப்பது போல் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு
" முதலில் சந்துரு, சர்ஜரில கலக்குவாராம், காலேஜ்  டாப்பர், ஸ்போர்ட்ஸ் சேம்ப்பியன், மொத்தத்தில் நம்ம ரமணிசந்திரன் நாவல்ல வர்ற ஹீரோ மாதிரியாம்..ஆனா சிரிக்க மட்டும் காசு கேப்பாராம்..பாவம் அவர் வாழ்க்கையில் என்ன சோகமோ..அடுத்து ப்ரேம்..ஸ்டடிஸ்,ஸ்போர்ட்ஸ் ரெண்டுலையும் சந்துருக்கு போட்டி இவர்தானாம்..ஆனா கேரக்டர்ல அவருக்கு ஆப்போஸிட்..பொண்ணுங்கன்னா ரொம்ப இஷ்டமாம்.so girls be careful.கடைசியா சுபி, இவங்க ஆரம்பத்துல bright ஸ்டூடண்டா இருந்தவங்க போகபோக ரொம்ப டல்லாயிட்டாங்களாம்..எப்பவுமே புரியாத புதிராம்..இதுல முக்கியமான விசயம் என்னன்னா...இவங்க மூனு பேருக்கும் ஆகவே ஆகாதாம்..அதாவது மூன்று பேரும் மூன்று துருவம்.." சொல்லியபடி தன்னை சுற்றிப் பார்த்தவள், எல்லோரும் சுவாரஸ்யமாக வாய் திறந்தபடி கேட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு சிரித்தபடி " all girls door close" என்றபடி சுஜாவின் வாயை  இரண்டு விரல் கொண்டு மூடவும் செய்தாள்.

அவள் கையை தட்டிய படியே "அது சரி...இந்த மேட்டர் எல்லாம் யார்கிட்ட இருந்து கறந்தது.?"என்றாள்.

"ஐ..அஸ்க்,புஸ்க்...அதெல்லாம் கம்பெனி சீக்ரெட்..அதை சொல்லிட்டா,எனக்கு எப்படி இந்த ராஜமரியாதை கிடைக்கும் சொல்லு?"  என்றாள் அனு.

"போடி, நீயே ஏதோ கதையடிக்கற..!" காவ்யா சொல்ல

"இது கதையல்ல நிஜம்னு , கொஞ்ச நாள்ல உனக்கே தெரியப்போகுது...ஆனாலும் எல்லா மேட்டரையும் தெரிஞ்சுகிட்டதுக்கு அப்றம் உனக்கு டவுட் வருது பாரு..நீ கண்டிப்பா பெரிய அரசியல்வாதி ஆயிருவ காவ்யா!" என்று ஆசிர்வதிப்பதுபோல் கைகளைத் தூக்கி கூறினாள் அனு.

மெஸ்ஸிற்குள் நுழைந்திலிருந்து அமைதியாக சாப்பிட்ட நந்துவையும்,ஆருவையும் கண்டு கடுப்பாகி, கொஞ்சம் தள்ளி சலசலத்துக் கொண்டிருந்த தன் புது தோழிகள் கூட்டத்தில் ஐக்கியமான அனு, போன சிறிது நேரத்தில் வேறு யாரையும் பேச விடாமல் தானே பேசியதுதான் மேலே உள்ள அனைத்தும்.
சற்று தள்ளி அமர்ந்திருந்த ஆருவிற்கும்,நந்துவிற்கும் இது எதுவும் தெளிவாக கேட்கவில்லை.ஒரு வேளை கேட்டிருந்தால் நாளை நடக்கவிருக்கும் அசம்பாவிதத்தை தடுத்திருக்கலாம்...

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 01

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 03

நினைவுகள் தொடரும்...  

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.