(Reading time: 20 - 40 minutes)

ரு நாள் முழுதும் வலி இருக்கும்ன்னு  சூர்யா சொன்னான். நல்லா ரெஸ்ட் எடு. நீ பெட்டர் ஆகுறதுக்குள்ள என்னோட மத்த வேலையெல்லாம் புஷ் பண்ணி முடிச்சிட்டா, அப்புறம் விடியோ கான்பரன்ஸ் போட்டு நம்ம ப்ராடக்ட்ல  வொர்க் பண்ணலாம். உன்னால முடியாட்டி, நம்ம ப்ரெசென்டேசனை போஸ்ட்போன் பண்ணிடலாம். உன் ஹெல்த் தான் முக்கியம். டேக் கேர்...வச்சுடவா?“ என அவளிடம் ஒப்புதல் கேட்க, அவளுக்கோ மனதே இல்லை.

“பாஸ் காலையில் ரெண்டு சர்ப்ரைஸ் ன்னு சொன்னீங்க...இன்னொரு சர்ப்ரைஸ் என்ன சொல்லவே இல்ல”,  அவள் ஆர்வமாக கேட்க,

“ஈவினிங் மது உங்க வீட்டுக்கு வருவா. அப்போ தெரியும்.”, நிதானமாக சொன்னான் கார்த்திக்.

“நீங்க வரமாட்டிங்களா? “ அதே ஆர்வம் குறையாது  கேட்டாள்.

“ஒரு நாள்ளே இப்படி மிஸ் பண்ணா, அடுத்த வாரம் ஊர்லே இருக்க மாட்டேன். எப்படி இருப்ப  என் வள்ளிக்கண்ணு” என அவன் சொல்லவதை கேட்டுக் கொண்டே லக்ஷ்மியிடம் இருந்து  ஜூஸ்ஸ பெற்றுக் கொண்ட சந்தியா,

“ம்....எனக்கென்ன “ என  ஒரு மடக்கு பருகி விட்டு, “நிம்மதியா இருப்பேன்...” என அலட்சியமாக சொன்னாள். அவள் ஏதோ  பருகும் சத்தத்தை  கவனித்தவனாய்,

“சாப்பாட்டு ராமி.... சைடுல போர் போடுற சத்தம் கேட்குது”

“ஆரஞ்சு ஜூஸ்”, சந்தியா

“ஆட்டுக்கால் சூப் குடி...அப்போ தான் தெம்பா நொண்டி அடிக்க முடியும்”, கிண்டலடித்தான்  கார்த்திக்.

“அய்யோ...நீங்க அம்மா டையளாக் எல்லாம் இப்படி உருவுறீங்க..அம்மா சூப்  குடிக்க மட்டேன்றேன்னு ஒரே திட்டு.  பூ க்கு எந்த ப்ராப்ளமும் இல்லாம குழந்தை பிறக்கணும்னு முருகன்கிட்ட எனக்கு பிடிச்ச விஷயத்தை விட்டு கொடுக்கிறேன்னு நேந்துருக்கேன்...அதான் குடிக்க முடியலை” என்றாள் சந்தியா.

“அப்ப உண்ணா விரதமா?...எப்படி வள்ளிக்கண்ணு தாங்குவ? இப்படி வெறும்  ஜூஸ் குடிச்சா உன் பேய்ப் பசியை ஆப் பண்ணவே முடியாதே..உங்கம்மா திட்ட தான் செய்வாங்க. பின்ன எப்படி தான் உன்னை அடக்க?” என அவன் நக்கலடிக்க,

“உண்ணா விரதம் எல்லாம் இல்ல…. அசைவம் மட்டும் சாப்பிட மாட்டேன்னு நேந்துருக்கேன். அவ்வளவு தான். அதுவே எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா...கேக் கூட சாப்பிட முடியல” என்றாள் வருத்ததுடன்.

“அப்போ நைட் வேட்டைக்கு போக மாட்ட ? இரத்த  வாசனை இல்லாம உனக்கு தூக்கமே வராதே”  என  மீண்டும் நக்கலடித்தான் கார்த்திக்.

“ஏன் வராது. நிம்மதியா தூங்கும் கலையை நேற்றே  தெரிந்து கொண்டேனே... “ என்று விட்டு பழச்சாறை  அடுத்த மடக்கு பருகி கொண்டிருக்க,

“சமத்து. அப்போ இன்று  வேறு ஒரு  கலையை தெரிந்து கொள்வாய். குழந்தாய் ..ராத்திரி நேரத்து பூஜையில் ” என அவன்  பாட ஆரம்பிக்க, அதை கேட்டு சந்தியாவிற்கு புரையேறியது. லக்ஷ்மி வேகமாக ஓடி வந்து அவள் தலையை தட்டி விட்டுக்கொண்டே,

“ஒன்னு ஜூஸ் குடக்கணும்...இல்ல போன் பேசணும்...இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியுமா ” என ,

பின்னணியில் லக்ஷ்மியின் அதட்டும் சத்தம் கேட்ட கார்த்திக் இணைப்பை துண்டித்தான். அவன் பேசி முடிக்கும் வரை காத்திருந்த மதுவிடம் அன்று மாலை அவள் சந்தியா வீட்டிற்கு செல்ல வேண்டிய விவரத்தை பேசிக் கொண்டே உணவருந்த சென்றனர். சிறிது நேரத்திற்கு பின் சந்தியா குறுஞ்செய்தியாக

“send my roses to home” என அவளின் பிறந்த நாள் பூங்கொத்தை அனுப்பி விட கேட்டிருந்தாள்.

மாலை 6:30 மணி

சந்தியாவின் கணுக்காலின் தசை நாரில் மிதமான பாதிப்பு தான். அதனால் ஒரு நாலைந்து நாட்கள் காலிற்கு அசைவு கொடுக்காமல், காலை படுத்த நிலையில் சற்று  ஏந்தலாக வைத்து, பனிக்கட்டி ஒத்தடம் அடிக்கடி கொடுக்கும் படி விவரம் கூறியிருந்தார்  மருத்துவர். அவளால் மாடி ஏற முடியாது என கீழே தங்களது அறையை அவளுக்கு கொடுத்திருந்தார் லக்ஷமி. விந்தியாவும், ஸ்ரீமாவும் பான்சி ஸ்டோர்க்கு சென்றிருந்தனர். அந்த நேரம் சந்தியா வீட்டிற்கு வந்தாள்  மது. தனது தாய் தந்தையரை அவளுக்கு  சந்தியா அறிமுகப் படுத்தி வைத்தாள்.  

பின் பொதுவான நலன்  விசாரிப்புகளுடன் கார்த்திக் அனுப்பி வைத்திருந்த கோப்புகளை சந்தியாவிடம் கொடுத்தாள் மது. அதை பார்த்து அதிர்ந்தவள், “என்ன மது கார்த்திக் இப்படி ப்ராடக்ட்ல என்னை பார்ட்னரா போட்டு 10% ஷேர்ஸ் எனக்கும் 10% ஆர்ம்ஸ் பவுண்டேஷன்னுக்கும் போட்டு இருக்காரு.” என அதிர்ச்சியுடன் கேட்க “ஆமா சந்தியா. நானும் இதை அவன்கிட்ட கேட்டேன். நீ பண்ணப் போற கான்செப்ட்ன்னால அவன் ப்ராடக்டோட மதிப்பு பல மடங்கு கூடுமாம். காதி பொதுவா பிஸ்னஸ்ல ரெம்ப பெர்பக்ட் மேனா இருப்பான். இப்போ இதில அவனும் நிருவும்  நிறைய இன்வெஸ்ட் பண்ணியிருக்காங்க. நியாயப்படி நீ பண்ற வேலைக்கு ஒரு பெரிய தொகை கொடுக்கணுமாம். அது இப்போ இவங்களால கொடுக்க முடியாதுங்கிறதால உனக்கு ஷேர்ஸ்ஸா கொடுக்குறாங்க. பின்னாடி இதோட டிமான்ட் கூடுறப்போ  வேல்யூ கூடும். உனக்கு அது தான் நல்லதுன்னு காதி சொன்னான். “ என்று மது தெளிவு படுத்தினாள்.

“ஆர்ம்ஸ் பவுண்டேஷன் பத்தி எப்படி தெரியும்? கார்த்திக் போட்டிருக்கிற கணக்கு படி 10% டே கோடிக்கணக்கான ரூபா மதிப்பு  வரும் போலவே? ...இப்படி கொடுத்தா இவுங்க போட்ட முதல எடுத்து லாபம் பார்க்க முடியுமா?” என அடுத்தடுத்து கேள்விகளை வைத்தாள் சந்தியா. அவள் சொல்வதை கேட்டு சிரித்த மது “ இப்படி தான்  அந்த தியாகச் சுடர் கேட்பா. கணக்கு வழக்கு சமாச்சாரம் எல்லாமே இந்த போல்டர்ல  இருக்கு.  அந்த ஸ்டேட்டிஸ்டிக்ஸ் புலியை கொஞ்சம் கணக்கு பண்ணி பாக்கச் சொல்லு. யாருக்கும் நஷ்டம் வராது. வர்ற லாபத்தை ஷேர் பண்ண போறோம். அவ்வளவு தான், அப்படின்னு என்கிட்ட சொல்லி காதி  அனுப்பி விட்டான்.“ என அவள் கொண்டு வந்த கோப்பை காட்டினாள்.

என்ன தான் மது சொன்னாலும், குழப்பமும் அதிர்ச்சியும் நீங்காமல், கார்த்திக்கை அழைக்க போனாள். அதை  தடுத்த மது “அவனோ பேசுறேன்னு சொல்லியிருக்கான். அதுக்கு முன்னாடி பேசணும்னா நீ ஆயிரத்தெட்டு மிஸ்டு கால் குடுத்து முடிக்கனுமாம்...உங்க அக்கா போன் ல கூப்பிட்டாலும் எடுக்க மாட்டானாம்” என்றாள் மது சிரித்த படி. “அப்ப உன் போனை குடு” என மதுவிடம் இருந்து போனை வாங்கி அவள் அழைக்க எடுத்தவுடன் கார்த்திக்,

“ஹே  சுகர் ” என்றான் கார்த்திக் அவளை எதிர்ப்பர்த்திருந்த படி.

“உங்களுக்கு  நான் தான் எப்படி தெரியும்?”, வியப்புடன் வினவினாள் சந்தியா.

“இது பேரு ப்ரிடிக்டிவ் அனாலிசிஸ்... தமிழ் ஆன்லைன் டிக்னரில  முன்கூறு பகுத்தய்வு… சம்திங் போட்டிருக்கு எழுத்து கூட்டி வாசிக்க கஷ்டமா இருக்கு. “ என்றான் கார்த்திக்.

“எனக்கு  எதுக்கு உங்க ப்ராடக்ட் ஷேர்ஸ்...வேண்டாம் பாஸ் ” என மறுத்தாள் சந்தியா.

“ஆபிஸ் டைம்ல மட்டும் தான் ஆபிஸ் வொர்க். அதுனால இப்போ மிட்நைட் மசாலாக்கு நாம டிஸ்கஸ் பண்ணப் போற கலைய பத்தி ஒரு இன்ட்ரோ கேக்குறியா?”

“ப்ச்...என்ன கார்த்திக்...ஐ அம் சீரியஸ்”, சந்தியா பட படவென்று.

“மீ டூ சுகர் ...ப்ளீஸ்  கேளு“, கார்த்திக், அவளை மாதிரி தொனியில் பேசினான்.

அந்த நேரம் மதுவிற்கு டீ கொண்டு வந்த லக்ஷ்மி சந்தியா கார்த்திக்கின் பெயரை விளிப்பதை கேட்டு “கார்த்திக் தம்பியா போன்ல....அவர்கிட்ட கேட்டு பாத்தியா? “ என கேட்க,

அவர் கேட்டது கார்த்திக்கிற்கு சன்னமாக எதிர்முனையில் கேட்க “பாரு உங்க அம்மாவே பீல் பண்றாங்க....பெரியவங்க சொன்ன கேக்கணும்” என்றான்.

“அதெல்லாம் கேக்க முடியாது “  என சந்தியா கார்த்திக்கிற்கு வெடுக்கென்று பதில் சொன்னாள்.

லக்ஷ்மியோ அவரின் கேள்விக்கு தான் பதில் அளிக்கிறாள் என நினைத்து “அதல்லாம் தப்பா நினைக்க மாட்டாங்க...கேட்டு பாறேன் சந்து “ என சொல்ல கார்த்திக்கும் “கேட்டுப் பாறேன் சந்து” என பின் பாட்டு பாடினான்.

சந்தியா “அய்யோ...அம்மா... கேக்கிறேன்...நீங்க போங்க” என லக்ஷ்மியுடன் கேட்டு விட்டு அவரை அனுப்புவதில் குறியாக இருந்தாள்.

கார்த்திக், “குட் கர்ல்... ராத்திரி நேரத்து பூஜையில்” என பாட ஆரம்பிக்க,

சந்தியா “கார்த்திக், அம்மா அதை கேக்க சொல்லலை” என தெளிவு படுத்த முயற்சிக்க,

கார்த்திக் “வேற பாட்டுன்னா , ஹிந்தி பாட்டு ஓகே வா?  ரூப் தேரா மஸ்தானா ..பியார் மேரா தீவானா” என அவன் பாடிக் கொண்டிருக்கும் போது கடுப்பாகி இணைப்பை துண்டித்தாள்.

சந்தியா போக சொன்ன பிறகும் தாயின் மனது ஆவலில் அங்கிருந்து போகாமல் அவளின் பதிலுக்காக காத்திருக்க, அவரை பார்த்த சந்தியா “சரியா சிக்னல் கிடைக்கலம்மா...கண்டிப்பா கேட்டு சொல்றேன்” என  உறுதியாக சொன்னாலும், “சரிப்......பா” என லக்ஷ்மியின் குரலில் ஒரு ஏக்கம் தொனித்தது. மது சந்தியாவிடம் என்னவென்று கேட்டாள். பூமா கர்ப்பமாக இருப்பதால் அவளுக்கு வாய்க்கு ருசியாக லக்ஷ்மி சில பலகாரங்களை செய்து அமெரிக்காவுக்கு  அனுப்பி விட ஆசை பட்டதாக சொன்னாள். கார்த்திக் செல்லும் நியூ யார்க் நகரத்தில் தான் பூமாவின் கணவர் வேலை  செய்வதால் அவன் எடுத்துச் சென்றால் அவர் நேரில் சென்று அதை வாங்கி கொள்வார் என மதுவிடம் தெரிவித்தாள்.

மது அதற்கு, “நீங்க கவலைப்படாதீங்க ஆண்டி. அதெல்லாம் அவன் எடுத்துட்டு போவான். நீங்க வெள்ளிக்கிழமைக்குள்ள  குடுத்து விடுங்க. அவன் சனிக்கிழமை காலையில் தான் கிளம்புவான்” என்றாள் லக்ஷ்மியிடம் ஆறுதலாக. மது சொன்னவுடன் ஏனோ லக்ஷ்மியின் கண்கள் கலங்கியது. புடவை முந்தானையை எடுத்து கண்களை துடைத்த படி, “ரெம்ப தேங்க்ஸ் ப்பா...அந்த பிள்ளை வாயும் வயிறுமா கண் காணாத இடத்தில இருக்கா...ரெண்டு தடவ தனியா கிடந்து இழுபட்டா. இந்த தடவையாவது புள்ளய பெத்தெடுக்கணும். பக்கத்தில இருந்தா இப்படி குடுத்து விட ஆள் தேடியிருக்க மாட்டேன்டா” சொல்லி முடிக்க முடியாமல்  அவர் குரல் உடைந்தது.

அதை பார்த்தவுடன் மதுவுக்கும் கண் கலங்க, “திருமதி. தன்ராஜ், உங்கள் சீரியலுக்கு தொடரும் போட்டு இப்போ ஸ்டாப் பண்ணுங்க... மது உனக்கு மிரர் நியூரான்ஸ் ரெம்ப ஜாஸ்தியா இருக்கு” என அவர்களிருவரையும் பார்த்து சந்தியா சொல்ல, மது,  “அப்படின்னா? “ என கேட்க, “டீச்சர்...எங்க நீங்க சொல்லுங்க பாப்போம் ..” அம்மாவிடம் கேட்டாள் சந்தியா.

கண்களை துடைத்தபடி  இயல்பு நிலைக்கு குரலை கொண்டு வர முயற்சித்த லக்ஷ்மி “எனக்கு என்ன பாப்பா தெரியும்? உங்கப்பா மாதிரி எங்கப்பா என்னை இங்கலிஷ் மீடியத்தில படிக்க வைக்கலயே” என சாக்கு சொல்ல, “ம்...இதையே சொல்லி இத்தனை வருஷமா உங்க டீச்சர் காலத்தை ஓட்டிட்டீங்க...” என சந்தியா கிண்டலடிக்க, லக்ஷ்மி வேகமாய் ,“எங்கிட்ட படிச்சு முன்னேறி நல்ல நிலைமையில்  எத்தனை பேரு இருக்கிறாங்க தெரியுமா?” என்றார் தொழில் பக்தியில். சந்தியா  கட்டிலில் படுத்திருந்தபடி, மதுவை அருகில்  அழைத்து, அவள் காதுக்குள் “ஆனா, எத்தனை பேரு நல்லாயில்லைன்னு சொல்லவே மாட்டாங்க.“ என்று  இரகசியமாக சொல்லி விட்டு சிரித்தாள்.

அதை கேட்டு மது சிரிக்க, என்ன நடக்கிறது என புரியாமல் பார்த்த லக்ஷ்மியிடம்  சந்தியா, “பாருங்க மது நான் சிரிக்கிறது பாத்து சிரிக்கிறா...நீங்க அழுகுறது பாத்து அழுகுறா...அதுக்கு காரணம் மிரர் நியூரான்ஸ்....நம்ம மூளையில நரம்பு மண்டலத்தில ஒரு சில இடங்களில் இருக்கு. அதன் மூலமா தான் நாம மத்தவங்க உணர்ச்சிகளை பார்க்கும் போது அது நமக்கு நடந்தது போல உணர முடிகிறது...முடிந்தவரை செந்தமிழில் சொல்லி விட்டேன் என் அன்னையே” என்று விளக்கி, லக்ஷ்மியை அழகாக திசை திருப்பினாள்.

அப்போது வரவேற்பறையில் தொலைக்காட்சியை பார்த்தக் கொண்டிருந்த தன்ராஜ்,  “லக்ஷ்மி எதி்த்த வீட்டு மீனாக்கா  உன்னை கூப்பிடுறாங்கா...போய் என்னென்னு கேளு“ என அவரை அழைக்கவே அந்த இடத்தை விட்டு அகன்றார் லக்ஷ்மி. அவர் சென்ற

பின் சந்தியா, மதுவிடம் “ உனக்கு மூளை முழுதும் மிரர் நியூரான்ஸ் தான் இருக்கு. இப்படியே இருந்தா நீ குழந்தையாவே தான் இருப்ப...இன்னும் வளரணும். உங்க காதி சும்மா உனக்கு செல்லம் குடுத்து குடுத்து கெடுத்து வச்சிருக்காரு” என சொல்ல,  

“அப்பா.....” என அலுத்துக் கொண்டவள், காதியும் நீயும் தூரத்தில இருந்தாலும் சண்டை மட்டும் லைவ்வா போகுது.....அவன் உன் கூட சேந்தா மூளை வளராதுங்கிறான்...நீ அவனை சொல்ற. நிஜமாவே சொல்றேன், எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மூளையும் இந்த மூணு நாள்ல கிராக் ஆகி ஒரு ரேன்ஜ்ஜாத் தான் சுத்திக்கிட்டு  இருக்கேன். “ என்று அவள் புலம்புவதை கேட்டு சந்தியா சிரித்தாள்.

அப்பொழுது கார்த்திக், சந்தியா போனில் அழைக்க  எடுத்தவளிடம் “வள்ளிக் கண்ணு சர்ப்ரைஸ் பிடிச்சிருந்ததா? “

சந்தியா, “அதான் வேண்டாம்ன்னு சொன்னேனே”  சிடு சிடுத்தாள்.

கார்த்திக், “ஸாண்டி சுகர், உங்க பூமா அக்காவை பாக்க ஆசை இல்லையா ?”என கேட்க,

சந்தியா ஆசையுடன்  “எப்படி இல்லாம இருக்கும்? “ என்று பின், “ஆனா எனக்கு டூரிஸ்ட் விசா ஈஸியா கிடைக்காதுன்னு குணா மாமா சொன்னாங்களே...அப்படியே கிடைத்தாலும்.... அப்பா டிக்கட் காஸ்ட்லி அப்படின்னு அவரும் செலவழிக்க மாட்டாரு...மாமாவையும் செலவு பண்ண விடமாட்டாரு....என்னை ஹாஸ்டல்ல விட்டுட்டு பூமா டெலிவரிக்கு போவாங்கன்னு நினைக்கிறேன் ”, என்றாள் சோகமாக.

“அப்ப இன்னும் மது சொல்லலையா...உனக்கு US பிஸ்னஸ் விசா ப்ராசஸ் பண்ண போறேன். உனக்கு வொர்க் எக்ஸ்பீரியன்ஸ் கம்மி. மது கொடுத்த போல்டர் உள்ள பார்ட்னர்ஷிப், ப்ராடக்ட் ஷேர்ஸ் எல்லாம் இருந்தா விசா வேலை ஈஸியா முடியும். நம்ம ப்ராடக்ட்டை ரிலீஸ் பண்ற நேரம் மார்க்கெட் பண்ண அடிக்கடி USக்கு வர வேண்டியிருக்கும். நானும், நிருவுமே ஹான்டில் பண்ணிடுவோம். ஆனா,  நீ அக்காவை மிஸ் பண்றேன்னு சொன்னேல அதான்.. உங்க அக்காவை  டெலிவரி சமயம் நீ கண்டிப்பா பாக்கலாம்...”  என்றான் கார்த்திக்.

“அய் ….நிஜமாவா?” கட்டிலில்  படுத்திருந்தவள் உணர்ச்சி வசப்பட்டு குழந்தை போல துள்ளிக் குதிக்க முயன்று, காலை அசைக்க வலி பின்னி எடுத்தது. “ஆ.. ப்பா...ஆ....முருகா”  என கத்தலில் ஆரம்பித்து முனங்கலில் முடித்தாள். அதைப் பார்த்த மது “ஏய் என்ன ஆச்சு” என கேட்கவாறு அவள் அருகில் இருந்த ஐஸ் பேக்கை எடுத்து  ஒத்தடம் கொடுக்க வர, லக்ஷ்மி வெளியில் சென்றிருந்ததால், வரவேற்பு அறையில் இருந்த தன்ராஜ் என்னவென்று அவளை பார்க்க வந்தார். பின், பெரிதாக ஒன்றுமில்லை என்ற பின், சந்தியா கையில் போனை வைத்திருப்பதை பார்த்து “அந்த பொண்ணு உன்னை பாக்க வந்திருக்கா,  அதுகிட்ட பேசாம போன் பேசிகிட்டு இருக்க. எப்ப பாரு போன்... அதுக்கு ஒரு வாயிருந்தாலும் அழுதிடும்.....” என பட படவென பொரிந்து தள்ளினார். சந்தியா வழக்கம் போல் ஒன்றும் பேசாமல் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டாள். அவர் கடைசியில் “போனை கொடு. உன்கிட்ட இருந்தா பேசிகிட்டே தான் இருப்ப..ரெஸ்ட் எடுக்க மாட்ட” என அதட்டி அதை அவளிடமிருந்து வாங்கினார். அவர் அப்படி சொல்லும் போதே இணைப்பைத் துண்டித்திருந்தாள் சந்தியா.

கார்த்திக் விவரமாக திட்டமிட்டு, தனது மென்பொருள் தயாரிப்பில் இருந்து  சந்தியா பின் வாங்க முடியாத படி அவள் கல்லூரி நண்பர்களுடன் நடத்தும் ஆர்ம்ஸ் பௌண்டேஷனுக்கு ஒரு பங்கு நிதி செல்வது போல செய்து, சந்தியாவின் நன்மதிப்பை பெற்ற நேரம் தொண்டு நிறுவனத்திற்கு ஒரு பங்கு செல்வதால் தனது மென் பொருளுக்கு வரி விலக்கும் பெற வழி வகுத்தான்.

ஆட்டம் தொடரும் ...     

Go to Episode 14

Go to Episode 16

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.