(Reading time: 9 - 17 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

பக்கம் திரும்பினாள்...

  

"பாரு, உனக்கு தெரியுமா... விவேக்கிற்கும் ஸ்ருதிக்கும் நடக்குறதா இருந்த கல்யாணம் நின்னுப் போச்சாம்..."

  

"ஏன்???"

  

பாரதியின் முகத்தில் தோன்றும் மாற்றத்தைக் கவனிப்பதற்காகவே திரும்பி அவளைப் பார்த்தப்படி பேசினாள் பவித்ரா. அதனால் பாரதியின் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியையும், அந்த கேள்வியில் இருந்த ஆர்வத்தையும், பரபரப்பையும் கவனிக்க அவள் தவறவில்லை. வேண்டுமென்றே உடனே பதில் சொல்லாமல் திரும்பி மீண்டும் கிண்டத் தொடங்கினாள். ஆனால் பவித்ரா எதிர்பார்த்ததுப் போல், பாரதி தோண்டித் துருவி எதையும் கேட்கவில்லை. தொடர்ந்து சில வினாடிகள் அப்படியே செல்ல... பாரதியின் மன உறுதியை மனதில் வியந்தப்படி, மீண்டும் அவள் பக்கம் திரும்பிப் பார்த்து பேசினாள் பவித்ரா.

  

"ஏன்னு எல்லாம் தெரியலை பாரு. ஆனால், ஸ்ருதிக்கு வேற இடத்தில் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி இருக்குன்னு உமா சொன்னாங்க..."

  

"ம்ம்ம்... ஸ்ருதிக்கும் விவேக்கைப் பிடிக்கலையா..." என்றாள் பாரதி இலகுவாக.

  

"இது என்ன இப்படி சொல்ற?"

  

"எப்படி?"

  

"ஸ்ருதிக்கும் பிடிக்கலைன்னா, வேற யாருக்கு விவேக்கை பிடிக்கலை???"

  

"ஹேய், தெரியாத மாதிரி கேட்குற... அவர் அன்னைக்கு என்கிட்டே வந்துப் பேசினது உனக்கும் தெரியும் தானே?"

  

"தெரியும்... ஆனால்..." என்று இழுத்தாள் பவித்ரா.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.