(Reading time: 9 - 17 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

"என்ன ஆனால்???"

  

"இல்லை விவேக் கேட்டதுக்கு நீ ஸ்டுடென்ட்ஸ் ரிலேடிவ்ஸ் கூட அளவுக்கு மேல பழக முடியாதுன்னு தானே சொன்ன? பிடிச்சிருக்கு, பிடிக்கலைன்னு எதுவும் சொல்லலை தானே?"

  

"ம்ம்ம்... அதுலேயே புரியுது தானே?"

  

"என்ன புரியுது??"

  

"நான் என்ன சொல்ல நினைச்சேன்னு..."

  

"ம்ம்ம்... அப்படியா? எனக்கு ஒன்னும் புரியலை... நீ என்ன சொல்ல நினைச்ச?"

  

"இப்போ எதுக்கு இந்த ஆராய்ச்சி, பவி?"

  

விவேக்கைப் பிடிக்கவில்லை என சொல்ல பாரதி விரும்பவில்லை என்பதை புரிந்துக் கொண்ட பவித்ரா, அதற்கு மேல் அப்போது அதைப் பற்றி பாரதியிடம் பேச வேண்டாம் என்று முடிவு செய்து பேச்சை மாற்றினாள். 

  

"சரி அதை விடு, மது கிட்ட எவ்வளவு டாலேன்ட் இருக்கு பார்த்தீயா?"

  

"ஆமாம் நிஜம் தான்... அவங்க ஃபேமிலில எல்லோருமே அப்படி தானே?" என்ற பாரதி, பவித்ரா முகத்தில் இருந்த புன்னகையை கவனித்து விட்டு,

  

"அவ அப்பா, அம்மா ரெண்டுப் பேருமே பெரிய ஆளுங்க... அந்த ஜீன்ஸ் இல்லாமல் போகுமா?" என்று முடித்தாள்.

  

பாரதியின் சமாளிப்பை புரிந்துக் கொண்டதால் புன்னகை பெரிதாக,

  

"அது சரி..." என்றாள் பவித்ரா!

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.