”என்னங்க அவன்கிட்ட கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன், அவனுக்கு தெரியாம நாம விசாரிச்சி பார்க்கலாம்” என சொல்ல வடிவேலுவோ
”சாந்தி ஜீவா விசயத்தில நான் தெளிவாயிருக்கேன், அவன் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாதான் இருக்கும், தேவையில்லாம நீ குழம்பி அடுத்தவங்களையும் குழப்பாத பொண்ணு பார்க்க கூப்பிட்டானா, போய் பார்க்கலாம் பொண்ணு பிடிச்சிருந்தா பேசி முடிக்கலாம், இது அவனோட வாழ்க்கை அவன் விருப்பப்படி நடக்கட்டும், வாழப்போறது அவன்தானே”
”ஆமாம்ங்க நீங்க சொல்றதும் சரிதான் சரி போய் பார்த்துட்டு வரலாம் ஆனா, எந்த வீட்டுக்கு போறதுன்னு தெரியலையே“
”எல்லாம் அவன் கூட்டிட்டு போவான் அந்த வீட்டுக்குப் போலாம் ம்”
”சரிங்க” என அமைதியாகிப் போன சாந்தியை பார்த்தபடி வந்தான் ஜீவா.
வடிவேலுவோ
”வா ஜீவா வேலைக்கு கிளம்பிட்டியா”
”ஆமாம்பா கிளம்பதான் போறேன் ஆமா இங்க என்ன பஞ்சாயத்து ஏதாவது பிரச்சனையா”
“சே சே அப்படியில்லையே” என சாந்தி பதற ஜீவாவோ
”ஏம்மா இப்படியிருக்க எதுக்கு பதட்டப்படற, தைரியமா இரும்மா ஒரு வார்த்தை அப்பா சத்தமா பேசினாலே அடங்கிப் போயிடற, என்கிட்ட ஏதாவது கேட்கனும்னா கூட அப்படி தயங்கற, எதுவாயிருந்தாலும் தைரியமா கேளும்மா”
”இல்லைப்பா அப்படி ஏதும் இல்லை” என சாந்தி சொல்ல வடிவேலுவோ
”சாந்தி இவ்ளோ நேரம் என்கிட்ட உன் பிரச்சனையை சொன்னல்ல, ஜீவா கேட்கறான்ல
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.