(Reading time: 5 - 9 minutes)
Nilave mukam kattu - Siddarth
Nilave mukam kattu - Siddarth

"நீ தான் ரவுடி."

  

"நீ தான் ரவுடி பேபி."

  

ஷில்பாவும், அதுலும் மாறி மாறி சொல்லிக் கொள்ள ப்ரித்தி சிரிப்புடன் ஷர்மிளாவின் அருகே வந்தாள்.

  

"அவர் காட்டேஜ் புக் செய்துட்டாராம் ம்மா. நாம போய் செக் இன் செஞ்சா போதும். நாளைக்கு காலையில கிளம்பலாம். பத்து மணி சரியா இருக்குமா? அதுல் ரொம்ப வேகமா காரை ஓட்ட மாட்டான்."

  

ஷில்பாவிடம் மல்லுக் கட்டுவதை நிறுத்தி விட்டு தன் அண்ணியை நேராக பார்த்தான் அதுல்.

  

"நான் டிராப் செய்றேன்னு சொல்லவே இல்லை. நீங்க பாட்டுக்கு ப்ளான் செய்றீங்க?"

  

"அதெல்லாம் வருவேன்னு ஒரு நம்பிக்கை தான்!"

  

"மாம், நான் பிஸி!" என அதுல் ஷர்மிளாவிடம் புகார் சொல்வதுப் போல சொன்னான்.

  

"அப்போ எங்களை டிராப் செய்ய முடியாதுன்னு சொல்ற? அப்படி தானே? சரி நாங்க தனியா போயிக்குறோம். வீட்டுல இரண்டு பசங்க இருக்காங்கன்னு பேரு. ஆனால் லேடீஸ் நாங்க மூணுப் பேர் தனியா தான் எங்கே போனாலும் போகனும்? பொறுப்பே இல்லாத பசங்க!"

  

"என்ன மாம் நீங்க? நகுல்க்கு அப்படி என்ன வேலை இருக்கு?"

  

"நீ பிடிக்கலைனா வராதே அதுல். உன் அண்ணன் வேலை செய்ற கம்பெனியை பெரிய கார்பொரேட் கம்பெனி வாங்கி இருக்கு. அவனே யார் தலை எல்லாம் உருளுமோன்னு புரியாம பயத்துல இருக்கான். நானும் ப்ரீத்தியும் அவனுக்காக தான் கெஞ்சி இந்த வெகேஷன் ப்ளான் செஞ்சிருக்கோம்."

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.