"உஜு சொல்றதும் கரக்ட். உனக்கே உனக்கான ஒரு பெர்சனை மீட் செய்யும் போது கமிட் செய்ய உனக்கு பயம் வராது. ரிஸ்க் எடுக்குறோம்னு டென்ஷன் ஆகாது. சந்தோஷமா அக்ஸப்ட் செய்துப்ப! எனக்கு, ஏவாக்கும் அப்படி தான் இருந்தது! " என்றான் மார்க்.
"எப்படி? கண்ணை திறந்து சிரிச்சுட்டு மலைல இருந்து விழுற மாதிரியா??" என ஏஞ்சல் கேட்க, மீண்டும் எல்லோரும் சிரித்தார்கள்.
"ஏஞ்சல், ரொம்ப கன்ப்யூஸ் ஆகாதே. இதுக்கு எல்லாம் ஹார்ட் அண்ட் பாஸ்ட் ரூல்ஸ் கிடையாது. மார்க் சொல்ற மாதிரி உனக்கே உனக்கான ஒருத்தனை மீட் செய்து, அப்படி ஒரு சிச்சுவேஷன் வரும் போது, உனக்கே அது புரியும். நீயே அக்ஸப்ட் செய்துப்ப!" என்றாள் மோனா.
"எனக்கு அந்த நம்பிக்கை இல்லை மோனா!" என சொல்லி உதட்டைப் பிதுக்கினாள் ஏஞ்சல்.
"சரி அந்த டாப்பிக் விடு, உன் வெகேஷன் பத்தி பேசுவோம். நீ என் டீம்ல வந்து பத்து வருஷமாச்சு. இப்போ வரைக்கும் சிக் லீவ் தாண்டி நீ லீவ் எடுத்ததே கிடையாது. டீம்ல இருக்கவங்களோட வெகேஷன் ப்ளான்ஸ்க்கு நான் தான் இன்சார்ஜ். அது மேனேஜேரியல் சைட்ல என்னோட இம்பார்டன்ட் அப்ரேய்சல் பாயின்ட். எல்லோரும் இந்த இயர் வெகேஷன் ப்ளான்ஸ் சொல்லிட்டாங்க. நீ மீட்டும் சொல்லலை?"
"எனக்கு எந்த வெகேஷன் ப்ளானும் இல்லை, மோனா. ப்ளீஸ் என்னை லீவ் எடுன்னு கம்பல் செய்யாதீங்க. லீவ் எடுக்காம இருக்குறதால நான் ஸ்ட்ரெஸ்ட் அவுட் ஆகலை. அப்புறம் என்ன? லெட் மீ டூ வாட் ஐ என்ஜாய்!"
"நீ இப்படி சொல்வேன்னு எனக்கு தெரியும். அதனால தான் உனக்கு ஏத்த மாதிரி புதுசா ஒரு அசைன்மென்ட் வச்சிருக்கேன். இது வெகேஷன், வேலை இரண்டுமே கலந்த மாதிரி இருக்கும். நம்ம சிட்டில இருந்து த்ரீ ஹவர்ஸ் ட்ராவல் செய்தா லான்கி மவுன்டேயின்னு ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் இருக்கு. அங்கே இருக்க ஸ்மால் பிஸ்னஸ் பத்தி நாம ஒரு மார்கெட்டிங் ரிசெர்ச் செய்யனும்."