(Reading time: 6 - 11 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

"எஸ்.... நானே தான்...."

  

ரமேஷ் என்ன சொல்லி சமாளிப்பது என்று அவசரமாக யோசித்தான். 

  

"வேண்டாம் சார்... நீங்க மார்க்கெட்டிங்கில் புலி... தெரியும்... இந்த தேவை இல்லாத சின்ன விஷயத்திற்கு எதற்கு உங்க மூளையை வேஸ்டா வேலை வாங்குறீங்க?" என்றான் விவேக் புன்னகை இன்னும் பெரிதாக!

  

"இல்லை மிஸ்டர் விவேக்.... சாரி... உங்களுக்குத் தெரியாமல் உங்களைப் பற்றி விசாரித்தது தப்பு தான்... உங்க ஃபிரெண்ட்ஸ் உங்க கிட்ட சொல்லி நீங்க உஷாராகி கண்டுப் பிடிப்பதற்குள் என் வேலையை முடிக்க நினைச்சேன்..."

   

"ம்ம்ம்ம்... பரவாயில்லை... என்ன நினைக்குறீங்க என்னைப் பற்றி? உங்க தங்கச்சிக்கு ஏத்த ஆள் தானா?"

  

"சாரி விவேக், எனக்கு தங்கச்சி இல்லை.... ஆனால்...."

  

"என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க? பாரதியை நீங்க நிஜமாகவே அப்போ தங்கையா நினைக்கலையா?"

  

ஒரு சில வினாடிகள் ஆச்சர்யமாக நின்ற ரமேஷ், பின் சுதாரித்துக் கொண்டு,

  

"நீங்க இவ்வளவு ஸ்மார்ட்டுன்னு நான் எதிர்ப்பார்க்கலை, மிஸ்டர் விவேக்..." என்றான் முகம் மலர!

  

"உங்க அளவிற்கு எதிர்பார்த்திருக்க முடியாது தான்.... ஆனால் இந்த மிஸ்டர் வேண்டாமே... ப்ளீஸ்..." என்றான் விவேக் புன்னகையோடு.

  

"எப்படி என்னைக் கண்டுபிடிச்சீங்க? உங்க ஃபிரெண்ட்ஸ் வேற யாராவது சொல்லி இருந்தாலும் கூட கண்டுப் பிடிப்பது கஷ்டமாச்சே.... நான் தொடர்புடைய யாரையுமே அணுகலையே...???"

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.