(Reading time: 9 - 17 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

"ஏன் பாரதி, பவியை சும்மா இருக்க சொல்ற, அவள் சொல்வதும் சரி தானே?"

  

பாரதி அதிர்ந்து போய் பார்க்க,

  

"நானே நினைச்சேன்... விவேக் மனசில் என்ன கற்பனை ஓடிட்டு இருந்தது என்பது தான் பார்த்தாலே தெரிந்ததே... உங்க இரண்டு பேருக்கும் கல்யாணமாகி இப்படி இரண்டு குழந்தை பி..."

  

"ப்ளீஸ் உமா, அப்படி எல்லாம் எதுவும் இருக்காது..." என்றாள் பாரதி அவசரமாக.

  

"கையை கொடு உமா, ரொம்ப சரி... அதே தான் நானும் நினைச்சேன்... இந்த பாருவை கூட சைட் அடிக்க ஒரு ஜீவன் இந்த உலகில் இருக்குப்பா..."

  

"நான் அதையே தான் விவேக்கிற்கு சொல்லனும், ஆனால் பாரதி அவரை பார்ப்பது கூட இல்லையே...."

  

"அட, பார்ப்பதில்லையா? நீ வேற? அது எல்லாம் மேடம் தனி திறனோடு செய்வாங்க... பார்க்காத மாதிரி தான் பார்ப்பாங்க... ஏன் பாரதி?"

  

தோழியின் பேச்சில் அவளையும் அறியாமல் தோன்றிய வெட்கத்தை அடக்க வழி தெரியாமல் பாரதி திண்டாடவும்,

  

"வாவ், பாரதி, இப்படி வெட்க படும் போது ரொம்ப அழகா இருக்க...நீ கோபமாக இருப்பதை பார்த்தே இப்படி உன் பின்னால் சுற்றும் விவேக், இதை எல்லாம் பார்த்தால் அவ்வளவு தான்...." என்றாள் உமா.

  

பாரதிக்கு இவர்களின் கேலி பேச்சில் இருந்து எப்படி தப்பிப்பது என்று புரியவில்லை. அவர்கள் இது போல் விவேக்குடன் அவளை இணைத்து பேசுவது அவளுக்கும் பிடித்திருப்பதை நினைத்து மனதில் சற்றே கலக்கமாகவும் இருந்தது. அவள் தனக்கு தானே போட்டுக் கொண்டிருந்த

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.