(Reading time: 9 - 17 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

***********

  

ஹாபலிபுரத்தில் எதிர்பார்த்ததை விட நேரம் இனிமையாக கழிந்தது. பின் மதிய நேரத்தில் மஹாபலிபுரம் அடைந்தவர்கள், பல முறை வந்த சுற்றுலா தளம் என்பதால், சிற்பங்கள் பார்க்க அதிக நேரம் செலவிடாமல், மதிய உணவை முடித்து விட்டு, கடற்கரையை அடைந்தார்கள். குழந்தைகள் நித்யா மற்றும் நித்திலாவை மடியில் வைத்தபடி கமலாவும், கற்பகமும் கதை பேச, உமா, பவித்ரா, பாரதி, மது ஒன்றாக உலாவினார்கள். பல நாட்களுக்கு பின் பாரதி, பவித்ரா மட்டும் அல்லாது மற்றவருடனும் இனிமையாக நேரத்தை செலவிட்டாள். மதுவுடன் அவளுக்கு ஏற்கனவே நல்ல உறவு இருந்தது. உமாவும் பந்தா எதுவும் இல்லாமல், சகஜமாக பழகவும், எந்த வித சஞ்சலமும் இல்லாமல் பாரதியாலும் அவளுடன் பேச முடிந்தது. 

  

பவித்ரா எப்போதும் போல் பாரதியை அவ்வப்போது கிண்டல் செய்து காலை வாரவும், உமாவும் அவளுடன் சேர்ந்து கிண்டலில் கலந்துக் கொண்டாள். மது பாரதியை விட்டுக் கொடுக்காமல் அவள் பக்கமே இருந்தாள். நான்கு பேரும் கலகலவென பேசி சிரிப்பதை சற்று தள்ளி நின்று நிரஞ்சன் மற்றும் ரமேஷுடன் நேரம் செலவிட்டுக் கொண்டிருந்த விவேக்கின் கண்கள் தவறவிடவில்லை. பாரதி அவன் அந்த பக்கம் பார்க்கும் ஒரு முறை கூட அவனை கவனிக்கவில்லை என்ற குறை அவனுக்கு மனதில் இருந்துக் கொண்டே இருந்தது...

  

விவேக்கை போலவே கற்பகமும், பாரதியை கவனித்துக் கொண்டு இருந்தாள். கமலா வேறு தன் பங்கிற்கு அவ்வப்போது பாரதியின் புகழை பாடவும், கற்பகத்திற்கு பாரதியுடன் பேசும் ஆர்வம் அதிகரித்துக் கொண்டிருந்தது. விவேக்கை போல் அல்லாமல் பாரதியின் விழிகள் வெகு அரிதாகவே அவன் பக்கம் செல்வதையும் கற்பகம் கண்டுக் கொண்டாள். பாரதியிடம் என்ன பேசுவது எந்த முறையில் பேசுவது என மனதில் திட்டமிடலானாள். அவள் தேர்வு செய்த ஸ்ருதியை விவேக் மட்டம் தட்டியதை போலவே, பாரதியும் ஒன்றும் வித்தியாசமானவள் இல்லை என்று நிருபித்து விடும் ஆர்வம் அவளை ஆட்டி படைத்தது.

  

ற்றவர்கள் அனைவரும் கடல் அலையில் விளையாட செல்லவும், பாரதி மட்டும் அவர்களுடன் கலந்துக் கொள்ளாமல் சற்று தள்ளி மணலில் அமர்ந்திருந்தாள். விவேக்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.