கண்களில் இருந்து வழிந்த நீரை துடைத்தப் படி அருகே இருந்த விசாலினியை பார்த்தாள் ரச்னா...
“... அதுக்கு அப்புறம் அவர் கிட்ட பேசவோ, திரும்ப நானே வீட்டுக்குப் போகவோ எனக்கு மனசில்லை... அதான், நானே டிக்கட் புக் செய்து இந்தியா வந்தேன்... அம்மா அப்பாக்கு அப்புறம் சொந்தக்காரங்க யாருமே தொடர்புல இல்லை.. சரி பழைய ஃபிரென்ட்ஸ் யாரையாவது பார்ப்போம்னு பார்த்தா... ப்ச்... அதுவும் சரியா வரலை... வேற என்ன செய்றதுன்னு புரியாமல் தான் கேரளா போக பஸ் ஏறினேன்... வழியில அந்த பஸ் பங்ச்சர் ஆகி நின்னப்போ இங்கே வந்தேன்...”
ரச்னா விளக்கம் கொடுப்பதுப் போல சொல்லவும், விசாலினி புரிந்துக் கொண்டவளாக தலையை அசைத்தாள்.
“வேண்டாத விஷயத்தை கிளறி விட்டுட்டேன்... நான் கேட்காமலே இருந்திருக்கலாம்...” என்றாள் விசாலினி வருத்தத்துடன்.
“ப்ச்... வெளியே சொல்லலைனாலும் இது எல்லாம் எப்போவும் மனசுல இருக்க வலி தானே... புதுசா ஒன்னுமில்லை... அன்னைக்கு நான் உங்க வீடுப் பக்கத்துல வந்தப்போ உங்க கணவர் சத்தம் போட்டுட்டு இருந்தார்... எனக்கு ஸ்ரேயான்ஷ்... என் கணவர் ஞாபகம் வந்த்து....”
“ஹும்.........” பெரிய பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட விசாலினி,
“ஏழை, பணக்காரங்க, படிச்சவங்க, படிக்காதவங்க, வேலைக்கு போறவங்க, போகாதவங்க, கிராமத்துல இருக்குறவங்க, பணக்கார நாட்டுல இருக்குறவங்க... இப்படி எப்படி எங்கே இருந்தாலும் பொண்ணுங்களுக்குன்னு பிரச்சனைகளுக்கு ஒரு குறைச்சலும் இல்லை... நாம எல்லாம் ஒன்னு தான்...” என்றாள்...
அவள் சொன்னதை ஏற்றுக் கொண்டவளாக தலை அசைத்தாள் ரச்னா!
ஒரு சில நிமிடங்கள் அமைதியில் செல்ல, ரச்னா விசாலினியை ஆராய்வதுப் போல ஒரு
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.