அத்விதாவின் அணைப்பிலும், வண்டாக மொய்த்த அத்விதாவின் விழிகளின் அழகில் மயங்கி,
“அத்வி...” என்ற கார்த்திகேயனின் கண்களில் காதல் கிறக்கம் இருந்தாலும், முகத்தில் 'பின்ச்' வெட்கமும் இருந்தது...
அதுவும் மதன் அப்போது,
“க்கும்... நாங்க எல்லாம் கண்ணை மூடிக் கிட்டோம் கார்த்திக்...” என்று கிண்டல் செய்யவும், அசட்டு சிரிப்பு ஒன்றை சிரித்து வைத்தான்...!
அப்போது தான் உணர்வுப் பெற்றிருந்த அத்விதாவும் வெட்கம் மின்ன சிரித்து விட்டு கார்த்திகேயனை விட்டு விலகி தள்ளி நின்றாள்...
கயல்விழி விழிகளால் கணவனை அடக்க, பெரியவர்கள் நால்வரும் எதுவுமே நடக்கவில்லை என்பது போன்ற பாவனையுடன் நின்றார்கள்!
மனைவியின் மறைமுக அதட்டலை ஏற்காது,
“சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்கன்னு இரண்டுப் பேரும் சொல்லாம சொல்றாங்க. உடனடியா ஆக்ஷன் எடுங்க மாமா, அத்தை... அப்போ தான் நாம உலகத்திலேயே பெஸ்ட் ஜோடியை சேர்த்து வச்சதை பெருமையா சொல்லி பீத்திக்க முடியும்...” என்றான் மதன்
“இன்னும் என்ன ஆக்ஷன்? அடுத்த மூகூர்த்த நாள்ல கல்யாணம் வச்சிர வேண்டியது தான்...” என்றார் உதயக்குமார் சந்தோஷம் மின்ன!
“பாவம்ங்க கார்த்திக் டையர்டா வந்திருப்பார்... இப்போ ஏர்போர்ட்ல வச்சா இதெல்லாம் பேசுறது? நாளைக்கு வீட்டுல பேசி எல்லாம் முடிவு செய்வோம்...” என்றார் அர்ச்சனா.
அர்ச்சனா சொல்வதில் இருக்கும் உண்மைப் புரிய, எல்லோரும் அதைக் ஏற்றுக் கொண்டு கிளம்பத் தயாரானார்கள். மறுநாள் இரு குடும்பமும் எங்கே, எப்போது சந்திப்பது என்று பேசிக்
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Super Binds.