This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
I can’t do everything, but I will do anything for YOU…
ஹரீஷ் பேசிக் கொண்டே போகவும் நிலா சிரித்தாள்!
"ஹையோ ஹரீஷ், ஸ்டாப் ஸ்டாப்! என்ன நீங்க வாழ்வே மாயம் ஸ்டார்ட் செய்து அந்த ஏழு நாட்கள் படம் கதை எல்லாம் சொல்றீங்க? அதெல்லாம் இந்தக் காலத்துல கிடையாது. இது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காலம். அந்த மாதிரி நல்லவங்க எல்லாம் கிடையாது. அத்தை உங்களை அநியாயத்துக்கு ரொம்ப நல்லவரா வளர்த்திருக்காங்க!"
ஹரீஷ் அவளின் கேலியை ஏற்றுக் கொள்ளவில்லை.
"இல்லை சுபி, நான் சுபாஷை கண்டுப்பிடிச்சு எதுக்கு அவர் உன் கிட்ட அப்படி நடந்துக்கிட்டாருன்னு கேட்டு உண்மையை தெரிஞ்சுக்கிட்டே தீருவேன். முடிஞ்சா உங்க இரண்டுப் பேரையும் சேர்த்து வைப்பேன்!"
"அப்படி சேர்த்து வைங்கன்னு நான் உங்க கிட்ட கேட்டேனா??? என்ன ப்ரூவ் செய்ய ட்ரை செய்றீங்க, ஹரீஷ்? நீங்க நல்லவர்னா??? யாரு கிட்ட அதை ப்ரூவ் செய்யனும்னு சொல்லுங்க. நானே அவங்க கிட்ட இவரு 200% சுத்த தங்கம்னு சொல்லிடுறேன். அதுக்கு அப்புறமாவது இப்படி ட்ராஷ் மாதிரி பேசுறதை நிறுத்துவீங்களா???"
ட்ராஷ் – குப்பை என்றா சொன்னாள்???
"நீங்க ஒரு விஷயம் புரிஞ்சுக்கனும். எனக்கு சுபாஷ் வேணும்னு நான் நினைச்சிருந்தா அவனை கடத்திட்டு கூட வந்திருப்பேன். அவனைப் பழி வாங்கனும்னு நினைச்சிருந்தா அவன் மேல போலீஸ்ல ஏமாத்திட்டான்னு கம்ப்ளேயின்ட் கொடுத்திருப்பேன். அவன் வேலை செய்ற கம்பெனில இருந்து அவனை தூக்குற மாதிரி கூட செய்திருப்பேன். ஆனால் எனக்கு அதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லை. இன்னொரு தடவை எந்தக் காரணத்திற்காகவும் இப்போ கொஞ்சம் முன்னாடி சொன்ன பழைய படம் கதை எல்லாம் சொல்லாதீங்க. அதும் அந்த ஸ்டுபிட் பேரை சொல்லி சொல்லாதீங்க."
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.