(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

"பாரதி, அம்மாவிடம் நீ சொன்னதை வச்சு எனக்கு நிஜமாகவே ஹெல்ப் செய்ய நினைத்து பேசி இருப்பன்னு நான் தான் தப்பா நினைசிட்டேனோ?"

  

"என்ன விவேக் இது, இப்படி சொல்றீங்க? அந்த பணத்தை இப்போதும் கூட உங்களுக்கு தர நான் தயார் தான்..."

  

"ஆனால் வாங்கிக் கொள்ள நான் தயார் இல்லை!" என்றான் விவேக் கோபமாக.

  

"ப்ளீஸ் விவேக், புரிஞ்சுக்கோங்க! அந்த பணம் தருவதற்கும் கல்யாணத்திற்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை."

  

"அதெப்படி பாரதி? என் மனைவி என் சரி பாதி, அவள் எனக்காக பணம் கொடுத்து உதவினால், சரி... நம்ம இரண்டு பேருக்குள் என்ன உறவு இருக்கு? நீ எதுக்காக எனக்கு உதவி செய்யனும்?"

  

"ஏன், ஃபிரெண்ட்ஸ்குள்ள ஹெல்ப் செய்ய மாட்டாங்களா?"

  

"நூறு ரூபாய், இருநூறு ரூபாய், ஏன் சில ஆயிரம் கூட பரவாயில்லை, ஆனால், கோடி கணக்கில் யாராவது தருவாங்களா என்ன?"

  

பாரதி பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தாள்.

  

"ஏன் நீயும் பவித்ராவும் அவ்வளவு க்ளோஸ் ஃபிரென்ட்ஸ். இருந்தாலும் ஓரளவிற்கு மேல் அவளை தொல்லை செய்ய கூடாதுன்னு நீயே தானே கொஞ்சம் முன்பு சொன்ன? ஃப்ரெண்ட்ஷிப் என்பது நல்ல விஷயம் தான் ஆனால் அதற்கு ஒரு எல்லை உண்டு, கணவன் மனைவி உறவு என்பது இது போல் எல்லை எல்லாம் இல்லாதது..."

  

"அதனால் தான் நானும் அதை வேண்டாம்ன்னு சொல்றேன்... ப்ளீஸ் விவேக், அந்த பேச்சு வேண்டாம்... பசிக்குதுன்னு சொன்னீங்களே முதல்ல சாப்பிடுங்க..."

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.