வருடம் 2020 மாதம் பிப்ரவரி தேதி 29
”அபி அபி கதவை திற” என யுவன் கத்த அபிக்கு பயம்தான் அதிகரித்தது, இவ்வளவு விசயங்களை தெரிந்துக் கொண்ட பின்பு அவளால் யுவனை நேரடியாக சந்திக்க பயந்தாள்.
மறுபடியும் இவன் என்ன செய்வானோ ஏது செய்வானோ என நினைத்தவள் அவசரமாக அங்கிருந்த பதிவுகளை அனைத்தும் மறைத்து வைத்துவிட்டு ஒன்றும் தெரியாதவள் போல கொட்டாவி விட்டபடியே கதவை திறந்தாள்
”தூங்கு மூஞ்சி இன்னுமா தூங்கற” என யுவன் சொல்ல அதைக்கேட்டபடியே வராத கொட்டாவியை வரவழைத்து
”ஹாய் யுவன்” என்றாள் அவனிடம் பேச விருப்பமில்லைதான் ஆனாலும் அவனை இந்த சமயம் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதில் மிகத்தெளிவாக இருந்தாள். அதனால் அவனுக்கு இணக்கமாகவே பேசி வைத்தாள்
”சொல்லு யுவன் என்ன இவ்ளோ சீக்கிரம் வந்திருக்க”
”இது சீக்கிரமா, கொஞ்ச நேரத்தில பர்த்டே பார்ட்டி நடக்கப் போகுது உன்னோட முடிவு தெரிஞ்சிக்கனும்னு நைட்டெல்லாம் தூக்கம் வராம அவசர அவசரமா ரெடியாகி இங்க வந்து பார்த்தா நீ என்னடான்னா தூங்கிக்கிட்டு இருக்க இது அநியாயம்”
”ப்ச் இன்னும் பார்ட்டி ஆரம்பிக்கலைல்ல அதுக்குள்ள நான் ரெடியாயிடுவேன்”
”ஆமா உங்கம்மா எங்க வீட்ல அவங்க இல்லையே”
”என்னை கேட்டா எனக்கென்ன தெரியும் நானே இப்பதான் எழறேன்” என சொல்ல அவனோ
”கோயிலுக்கு போயிருப்பாங்க போல”
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.