(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

அப்படியே வந்துட்டா... மற்றபடி இதெல்லாம் நாம சொல்லி பாரதிக்கு தெரியனும்னு இல்லை...”

  

பவித்ரா சொன்னதைக் கேட்டுவிட்டு, மீண்டும் பாரதியைப் பார்த்த கற்பகம்,

  

விவேக் எழுந்தாச்சா பாரதி?” எனக் கேட்டாள்.

  

இன்னும் இல்லை அத்தை...”

  

அவனை எழுப்பி காஃபி கொடு... இரண்டுப் பேரும் நேரத்திற்கு மறுவீடு கிளம்பனுமே...”

  

ஆமாம் பாரு, லஞ்ச் அங்கே தான்... எல்லாம் தயார் செய்ய தான் அத்தையும், அவரும் நேற்றே கிளம்பி போயிட்டாங்க...” என்று பவித்ராவும் சொன்னாள்.

  

பொதுப்படையாக சரி என தலை ஆட்டி விட்டு, உமாவின் கட்டளையில் கையில் வந்து சேர்ந்திருந்த விவேக்கிற்கான காஃபி கோப்பையை எடுத்துக் கொண்டு, அமைதியாக அவர்களின் அறைப் பக்கம் சென்றாள் பாரதி.

  

பவித்ரா, உன் ஃபிரென்ட் சரியான தொட்டா சிணுங்கி போல இருக்கே...” என்றாள் கற்பகம்.

   

அப்படி எல்லாம் இல்லை மேடம்...” என்று அவசரமாக மறுத்தாள் பவித்ரா.

  

அவக் கொஞ்சம் வித்தியாசமான டைப்... அவளுக்குப் பிடித்தது போலவே வாழ்ந்து பழக்கப் பட்டவள்... ஒரே பொண்ணு இல்லையா? அவளுடைய அம்மா அப்பாவிற்கு பிறகு முழுக்க முழுக்க தனியாகவே இருந்து பழக்கப் பட்டவள்...”

  

பவித்ராவின் விளக்கத்தை ஏற்றுக் கொள்வதாக தலை அசைத்த கற்பகம்,

   

புரியுது பவித்ரா. பாரதி அப்படி இருப்பதும் கூட பரவாயில்லை... நம்ம உமா இருக்காளே பாறை மாதிரி... என்ன சொல்லு, ஒரு ரியாக்ஷனும் இருக்காது... அதற்கு உன் ஃபிரெண்டே பரவாயில்லை... கொஞ்ச நாளுக்கு உன் ஃபிரெண்டை சீண்டி பார்க்கலாம்...” என்றாள் சின்ன

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.