(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

புன்னகையுடன்.

  

உமாவும் அதை சீரியசாக எடுத்துக் கொள்ளாது,

   

அது என்னவோ சரி அத்தை... ஆனால் எல்லாம் கொஞ்ச நாளுக்கு தான்... அப்புறம் பாரதியும் இந்த டாக்டிக் எல்லாம் கத்துப்பா...” என்றாள்.

  

பாரதிக்கு சொல்லிக் கொடுக்க தான் நீ இருக்கீயே...” என்ற கற்பகம், மற்ற இருவர் முகத்திலும் தோன்றி இருந்த புன்னகையை கவனித்து விட்டு,

  

சரி, நீங்க இரண்டு பேரும் டிஃபன் சாப்பிடுங்க, நான் வரேன்...” என்றாள்.

  

இல்லை மேடம், பாரதியும், விவேக் சாரும் வரட்டும்...” என்று பவித்ரா சொல்ல, உமாவும்,

  

ஆமாம் அத்தை எல்லோரும் ஒன்னா சாப்பிடுவோம்...” என்றாள்.

  

நல்ல பொண்ணுங்க... நேற்று கல்யாணமானவங்க, அவ்வளவு சீக்கிரம் வருவாங்களா? அவங்களுக்காக காத்திருக்காமல் நீங்க சாப்பிடுங்க... அப்புறம் பவித்ரா, இன்னும் என்ன மேடம், சார் எல்லாம்? என்னை உங்க அம்மா வயசுக்கு ஏத்த மாதிரி பெரியம்மா, சித்தி இல்லை பொதுவா அம்மான்னு கூப்பிடு... என் மகன், மருமகளோடு, மறுவீடு வருவது உன் வீட்டிற்கு தானே, அப்புறம் நீ என்னை இப்படி கூப்பிட்டால் எப்படி?”

  

சொல்லி விட்டு, பவித்ராவின் கன்னத்தில் செல்லமாக தட்டி விட்டு அங்கே இருந்து சென்றாள் கற்பகம்.

  

என்ன பவித்ரா, இவங்களை எந்த கேட்டகரில சேர்ப்பதுன்னு யோசிக்கிறீயா? அவங்க அப்படி தான்... எப்போ திட்டுவாங்க எப்போ செல்லம் கொஞ்சுவாங்கன்னு சொல்ல முடியாது. ஆனால் அத்தை எதையும் மனசில் வச்சுக்க மாட்டாங்க...” என்றாள் உமா.

  

ரொம்ப நல்லது தானே உமா...” என பவித்ரா சொல்ல,

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.