(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

பெண்கள் போல் இல்லை... வித்தியாசமானவள்... அவளுக்கு எது சரி, எது தவறுன்னு நீ தான் எடுத்து சொல்லனும்...”

  

எனக்கு புரியுது பவித்ரா... அத்தையைப் பற்றி தானே கவலைப் படுற? அதெல்லாம் நான் பார்த்துக்குறேன், நீ கவலைப் படாதே...”

  

அதற்குள் பாரதி அவர்களின் அருகே வந்து விடவும், இருவரும் பேச்சை நிறுத்தி, அவளை கேலி செய்ய தயாரானார்கள்!

  

🌼🌸❀✿🌷

  

விவேக் சற்று தாமதமாகவே அவனின் அறையில் இருந்து வந்தான்.. வந்தவன், பாரதி பவித்ராவிடம் பேசிக் கொண்டிருப்பதை கவனித்து விட்டு, வேலையாளிடம் எதுவோ சொல்லிக் கொண்டிருந்த உமாவிடம் சென்று பேசினான்... பாரதியின் கண்கள் அவனையே தான் தொடர்ந்துக் கொண்டிருந்தது...

  

அதைக் கவனித்து கண்களை செல்லமாக சிமிட்டியவன், உடனே கிளம்ப ஆயத்தமானான்... பவித்ரா, பாரதி, விவேக் மூவரும் அனைவரிடமும் விடைப் பெற்று கிளம்ப முடிவு செய்த நேரம், கற்பகம் சின்ன யோசனைக்குப் பின்,

  

"மதுவும் உங்க கூட வரட்டும்..." என்றாள்.

 

"என்னம்மா திடீர்னு???" புரியாமல் கேட்டான் விவேக்!

  

"கல்யாணம் முடிஞ்சு முதல் தடவை வெளியே கிளம்புறீங்க... மூணுப் பேரா போக வேண்டாம்... மதுவும் உங்க கூட வரட்டும்..." என்றாள் கற்பகம்!

  

"என்னம்மா... அப்பப்போ எப்படி இப்படி மாறுறீங்க??" என்று அலுத்துக் கொண்டாலும், மதுவையும் உடன் அழைத்துக் கொண்டே கிளம்பினான் விவேக்.

 

🌼🌸❀✿🌷

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.