வருடம் 1980
பூசாரிபட்டி கிராமம்
இளம் விதவையான ஜானகியை கண்டு அவளின் பெற்றோர்கள் கதறி கதறி அழுதார்கள். அதில் பாவம் அவர்களின் கண்ணீரை கண்டுக்கூட சுற்றியருந்த யாருக்குமே மனம் இரங்கவில்லை. ஜானகிக்கும் தனக்கு நடந்தது அநியாயம் என நினைக்கவில்லை அதுதான் சரியென்றே அவளின் மனம் ஒப்புக் கொண்டது, பாவம் அப்பாவி பெண், விதி அவளை சூழ்ச்சியில் சிக்க வைத்துவிட்டது.
சுந்தரேசனின் பெற்றோரும் அந்தளவு அயோக்கியர்கள் அல்லதான் ஆனால் பெத்த பிள்ளையின் இறப்பு, பயம், பதட்டம் தாய்கிழவியின் பேச்சு, ஏற்கனவே செய்து கொடுத்த வாக்கு, அச்சாரம் சரி மகன்தான் இல்லை மருமகளாவது தங்களுக்கு இருக்கட்டுமே என்கிற எண்ணத்தில் எடுத்த முடிவு
இப்போது சுந்தரேசனின் மனைவியாக இளம் விதவை கோலத்தில் வெள்ளை புடவையுடுத்தி எந்த அணிகலனும் இன்றி பொட்டின்றி பூவின்றி கவலை தோய்ந்த முகத்துடன் இருந்த ஜானகியை பார்க்க அவ்வளவு பாவமாக இருந்தது. அவளும் சுந்தரேசனின் பிரேமிட்ட போட்டோ முன் விளக்கேற்றி வைத்துவிட்டு அங்கேயே அமர்ந்திருந்தாள்.
வந்திருந்த சொந்தங்கள் கூட அவளை அந்த வீட்டு மருமகளாக பாவித்து ஆறுதல் வார்த்தைகளை பொழிந்துவிட்டு சென்றார்களே தவிர அவளுக்கு நடந்தது ஒரு அநீதி என ஒருவரும் நினைத்து அவளுக்காக தவறிகூட பரிந்து பேசவில்லை, அது என்னவோ அவளுக்கு நடந்தது அனைத்தும் சரிதான் என்ற நினைப்பு ஊர் மக்கள் அனைவரின் மனதிலும் பதிந்துவிட்டது.
ராமமூர்த்தியும் ஜெயந்தியும் வந்திருந்த மக்களிடம் கெஞ்சி கூத்தாடினார்கள், யாராவது ஒருவராவது மனம் இறங்குவார்கள், தன் மகளுக்கு துணையாக நின்று பேசுவார்கள் என அனைவரையும் உதவிக்கு அழைத்தார்கள் ஆனால், யாருமே செவிசாய்க்கவில்லை. வந்திருந்த மக்களும் தம்தம் வீடுகளுக்கு சென்றார்கள், சொந்தங்கள் மட்டுமே அங்கிருக்க அந்த
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.