(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

நினைத்தாள் என்பது புரிந்துப் போனது...

  

"டோன்ட் வொர்ரி ரதி, நான் உன்னை டிஸ்ஸபாயின்ட் செய்ய மாட்டேன்... இந்த விவேக் காதல் மன்னன் அவதாரம் எடுக்குறதுக்கு முன் உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்..” என்றான்!

  

நான் என்ன எக்ஸ்பெக்ட் செய்தேன் டிஸ்ஸபாயின்ட் ஆக? நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க...” என்றாள் பாரதி!

  

அது தானே... நீ எப்போ உண்மையை சொல்லி இருக்க?" என சொல்லி அவளை சீண்ட தொடங்கிய விவேக்கிற்கு தான் பேசத் தொடங்கிய விஷயம் நினைவுக்கு வரவும்,

   

"சரி சரி முறைக்காதே... இந்த நகை விஷயம் பின்னால் இருக்குறது அம்மா தானே?” என மீண்டும் முக்கிய விஷயத்திற்கு வந்தான்.

  

விவேக்கின் அந்த கேள்வியை பாரதி எதிர்பார்த்திருக்கவில்லை... என்ன சொல்வது என்ற குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்...

  

அண்ணி கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன் ரதி... ரூமுல நகையை எடுத்தப்போ உன் முகமே சரி இல்லை... நான் கேட்டப்போ நீ எதுவும் சொல்லலை, அது தான் என்ன விஷயம்னு அவங்க கிட்ட கேட்டேன்..." என்று சொல்லிக் கொண்டே பாரதியின் கையை பற்றிக் கொண்ட விவேக்,

  

"உன்னை பத்தி எனக்கு தெரியும்... வீட்டில யாரவது ஏதாவது சொல்வது உனக்கு பிடிக்கலைன்னா, நான் தப்பா எடுத்துப்பேனோன்னு நீ கவலையே படாமல் என் கிட்ட சொல்லலாம்... நீ கம்ப்ளெயின்ட் செய்றதா எல்லாம் நான் நினைக்க மாட்டேன்... நமக்குள் எந்த ஒளிவு மறைவும் வேண்டாம்... உன் மனசுல எந்த கவலை வந்தாலும் அதை என் கிட்ட சொல்ல அடுத்த முறை நீ யோசிக்க கூடாது... நேரா இந்த விவேக் கிட்ட வரனும்...” என்றான்.

  

பாரதி வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தாள்... அவள் சொல்லாத விஷயத்தைக் கூட என்ன என்று ஆராய்ந்து கண்டுப்பிடித்து இருக்கிறான்...!!! சின்ன விஷயம் தான்... ஆனாலும் அவன்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.