(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

உணவை ஹாட் பேக்கில் மாற்றி எடுத்துக் கொண்டு நடந்தாள் சத்யா.

  

ஐந்து நிமிடத்தில் பர்வதம் பாட்டியின் வீட்டை அடைந்தவள், அங்கிருந்த கேட்டை தட்டினாள்.

  

“ஹாய் சத்யா! இங்கே தான் இருக்கேன். இதோ வரேன்,” எனும் சக்தியின் குரல் கேட்டது.

  

ஒரு சில வினாடிகளில் களிமண்ணும் கையுமாக வந்து கேட்டை திறந்தாள் சக்தி.

  

“என்னங்க சக்தி கோலம் இது?” என அவளை மேலும் கீழுமாக பார்த்துக் கொண்டே கேட்டாள் சத்யா.

  

“ரொம்ப போர் அடிச்சது. சரின்னு கார்டனிங் செய்யலாம்னு ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட முடிச்சாச்சு. நீங்க வாங்க,” என்றாள் சக்தி.

  

“ஏன் போர் அடிக்குது? வை-ஃபை கனக்ஷன் இன்னும் வரலையா?” என விசாரித்தாள் சத்யா.

  

“சொல்ல மறந்துட்டேனே. தேங்க்ஸ் சத்யா. மதியம் வந்து கனக்ஷன் கொடுத்தாங்க. ஆனால், இன்னும் ஆக்டிவேட் ஆகலை," என்றாள் சக்தி.

  

“அதானா உங்களுக்கு போர் அடிக்குது. சரி வாங்க சக்தி, உங்களுக்காக டின்னர் எடுத்துட்டு வந்திருக்கேன். சுட சுட சாப்பிடுங்க...”

  

“என்ன நீங்க தினம் தினம் இப்படி எடுத்துட்டு வரீங்க? உங்களை ரொம்ப வேலை வாங்குறேன்னு எனக்கு கஷ்டமா இருக்கு,” என்றாள் சக்தி தயக்கத்துடன்.

  

“இப்படிலாம் சொன்னா, நான் நிஜமாவே சொல்றீங்கன்னு எடுத்துட்டு சாப்பாடு கொண்டு வர மாட்டேன். அப்புறம் ஒன்னு நீங்களா சமைக்கணும் இல்ல பாட்டி சாப்பிடுற ராகி கஞ்சி குடிக்கனும். பரவாயில்லையா?” என கண்களை உருட்டிக் கொண்டு கேள்வி கேட்டாள் சத்யா.

  

உதட்டோரம் சிறுநகை தோன்றினாலும்,

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.