(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

என்னைப் பத்தி சொன்னீங்க?”

  

“சும்மா சொன்னேன். உங்க வீட்டுக்கு வந்து அருணோட கிரிக்கெட் விளையாடினேனே அன்னைக்கு அங்கே இன்ஸ்பெக்டர் வந்தாரே ஞாபகம் இருக்கா? அப்போ அங்கே இருந்து நேரா அவர் வீட்டுக்கு தான் போனோம். அப்போ சத்யாக்கா கேட்டாங்க, சொன்னேன்.”

  

“புரியுது”

  

“அன்னைக்கும் உங்க எதிர் வீட்டுக்காரங்க தான் இன்ஸ்பெக்டர்க்கு போன் செய்து போட்டுக் கொடுத்தாங்க. அவங்களுக்கு அப்படி என்ன உங்க மேல கோபம்?”

  

“அந்த மேகத்தைப் பாருங்களேன். உங்களுக்கு அதைப் பார்த்தா என்ன மாதிரி இருக்குன்னு தோணுது?”

  

அஹல்யா காட்டிய இடத்தில் இருந்த மேகத்தை கவனித்தான் அபினவ்.

  

“யாரோ படுத்திருக்க மாதிரி இருக்கு”

  

“என் கண்ணுக்கு ஒரு நாய் குட்டி உட்கார்ந்திருக்க மாதிரி தோணுது”

  

“சரி! இருந்துட்டுப் போகட்டும்.”

  

“இது தான் நீங்க கேட்ட கேள்விக்கு பதில்! அருண் கிளாஸ் முடியுற நேரமாச்சு. நான் கிளம்புறேன்”

  

இது எப்படி அந்த கேள்விக்கு பதில் ஆகும்? அபினவுக்கு ஒன்றும் புரியவில்லை.

  

🌼🌸❀✿🌷

   

னக்கு ஒன்னும் புரியலை. ஏதிர் வீட்டுல இருக்கவங்களுக்கு உங்க மேல என்ன கோபம்ன்னு கேட்டா, சம்மந்தமே இல்லாம மேகத்தை காட்டிட்டு, அது தான் பதில்ன்னு

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.