(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

காக்கி உடையில் இருந்து வீட்டு உடைக்கு மாறி இருந்த தென்றல்வாணன் சத்யாவை கேள்வியாக பார்த்தான்.

  

“அப்படி என்ன நாளைக்கு ப்ளான்?”

  

“எனக்கு ஒரு பிளானும் இல்லை. சக்தி ஷாப்பிங் போகணும்னு சொன்னாங்க”

  

“நீ சக்திக்கு ஹெல்ப் செய்றது ஓகே. ஆனால் ரொம்ப அதிகமா செய்ற மாதிரி இருக்கு”

  

“அப்படி என்ன செய்தேன்?”

  

“நேத்தைக்கு மார்னிங் நான் போன் செய்தப்போ நீ போன் அட்டென்ட் செய்யலை, ஏன்?”

  

“சக்தி வீட்டுக்கு வந்திருந்தாங்க பேசிட்டு இருந்தேன்.”

  

“அதுக்கு முன்னாடி நாள் நான் வீட்டுக்கு வந்த நேரத்துல நீ வீட்டுலேயே இல்லை. ஏன்?”

  

“சக்திக்கும் பாட்டிக்கும் டின்னர் கொடுக்க போயிருந்தேன். அதுக்கும் முன்னாடி நாள்ன்னு ஸ்டார்ட் செய்யாதீங்க. சக்தி தனியா இருக்காங்களேன்னு பேசுறேன் அவ்வளவு தான்!”

  

“அதைப் பத்தி நான் எதுவும் சொல்லலை சத்யா. சக்திக்கு நிறைய எதிரிங்க இருக்காங்க. அவங்க ஒரு ட்ரெயின்ட் ஆபிசர் அலர்ட்டா இருப்பாங்க. ஆனா அவங்க கூடவே நீ இருந்தா அது உனக்கு பாதுகாப்பானதில்லை”

  

“அடடா! உங்க பாதுகாப்பு லெக்சரை ஆரம்பிச்சிட்டீங்களா? ரோடுல போனா லாரி வருது போகாதேன்னு சொல்வீங்க போல இருக்கு”

  

அவளை மார்புடன் அணைத்துக் கொண்டான் தென்றல்வாணன்.

  

“அதையும் சொல்வேன் தான். நீ எனக்கு ரொம்ப முக்கியம் சத்யா”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.