(Reading time: 8 - 15 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

லதாவின் "மேடமும்', பதற்றமும் பாரதிக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது...

  

ஹாய் லதா, நான் விவேக் வைஃப் பேசுறேன்...” என்று அவள் சொல்லவும்,

  

தெரியும் மேடம். விவேக் சார் உங்க நம்பர் கொடுத்து சேவ் செய்து வச்சிருக்க சொன்னார்...” என்றாள் லதா!

  

விவேக் வேலை தானா... என்ற எண்ணத்தில் உதட்டில் தானாக ஒரு புன்னகை மலர,

    

ஓ ஓகே... எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் லதா...” என்றாள் பாரதி.

  

சொல்லுங்க மேடம்...”

  

எனக்கு விவேக்கோட அப்பாயின்ட்மென்ட் டீடெயில்ஸ் வேணும்... அவர் இன்னும் கொஞ்ச நாளைக்கு பிஸின்னு தெரியும்... எப்போ அவருக்கு ஒரு இரண்டு மணி நேரம் சேர்ந்து ஃப்ரீ டைம் இருக்கும்ன்னு பார்த்து சொல்ல முடியுமா? இப்போவே சொல்லனும்னு இல்லை... மன்டே சொன்னால் கூட போதும்...”

  

இல்லை மேடம் நான் இப்போதே சொல்றேன். சாருடைய டீடெயில்ஸ் நான் டைரியில் வச்சிருக்கேன்... ஒரு நிமிஷம் மேடம்...”

  

ஓகே சொல்லுங்க... நான் வெயிட் செய்றேன்...”

  

ஒன்றிரண்டு நிமிடங்கள் செல்ல,

   

மேடம், இன்னும் இரண்டு வாரத்துக்கு இரண்டு மணி நேரம் சேர்த்து டைம் இல்லை... இன்ஃபாக்ட் இரண்டு வாரம் கழிச்சு புதன் கிழமை தான் ஒரு மணி நேரம் டைம் இருக்கு... ஈவ்னிங் நாலு மணி...” என்றாள் லதா!

  

ம்ம்ம்... சரி, அந்த டைமை ப்ளாக் செய்றீங்களா? சும்மா பர்சனல்ன்னு போடுங்க போதும்...”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.