(Reading time: 8 - 15 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

என்றாள் பாரதி.

  

சரி மேடம்...”

  

தேங்க்ஸ் லதா!”

  

ஃபோனை கட் செய்த பாரதி, அடுத்து உடனடியாக கற்பகம் சொன்ன மருத்துவமனைக்கு ஃபோன் செய்தாள். தலைவலிக்கு நியூராலஜிஸ்ட் பார்க்க வேண்டும் என சொல்லி, வார இறுதி நாட்களில் டாக்டர் இருப்பார்களா எனக் கேட்டு, வார நாட்களில் தான் ஸ்பெஷலிஸ்ட் இருப்பார் என்பதை அறிந்துக் கொண்டாள். லதா சொன்ன அந்த புதன் கிழமை மாலை ஐந்து மணிக்கு விவேக் பெயரில் டாக்டரை பார்க்க அப்பாயின்ட்மென்ட் புக் செய்ய சொல்லி விட்டு, அழைப்பை துண்டித்து வைத்தாள்.

  

அதே அறையில் அமர்ந்து, பாரதியை கவனித்துக் கொண்டிருந்த உமா,

  

நல்ல ஐடியா தான் பாரதி. இப்படி செய்லாம்னு இதுவரை எங்க யாருக்கும் தோணவே இல்லையே! ஆனால், விவேக்கை ஹாஸ்பிட்டல்க்கு கூட்டிட்டுப் போவது ஈசி இல்லை. அவருக்கு அது என்னவோ ஹாஸ்பிட்டல் என்றாலே அலர்ஜி...” என்றாள்.

  

இவ்வளவு செய்றோம், அவரை கூட்டிட்டுப் போயிட மாட்டோமா?” என சொல்லி சிரித்தாள் பாரதி.

  

அவளின் வாழ்வை தலைகீழாக மாற்ற போகும் சம்பவங்களுக்கு அது தான் முதல் அடி என்பது அப்போது அவளுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை!

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

தொடரும்...

Go to Unnaruge naan irunthaal story main page

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.