(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

அவள் இப்படி எல்லாம் பேசியதும் இல்லை, சிரித்ததும் இல்லை!

  

சத்யாவுடன் ஏட்டிக்கு போட்டி பேசுவதே தனி சுவாரசியமான அனுபவமாக இருந்தது.

  

“சரண்டர் சத்யா மேடம். சரி யார் இந்த டாக்டர் பிரசாத்? அவரை நாம ஈசியா போய் சந்திக்க முடியுமா??” எனக் கேட்டாள் சக்தி.

  

“டாக்டர் பிரசாத் இந்த ஊருல பெரிய மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் வச்சிருக்கார். ரொம்ப நல்ல டாக்டர். அந்த ஹாஸ்பிட்டல்ல அதிகமா பணம் பிடுங்க மாட்டாங்க. நம்பிப் போகலாம். வசதி குறைச்சலா இருக்குறவங்களுக்கு அவங்களால கொடுக்க முடிஞ்ச அளவுக்கு தான் அங்கே பில் போடுவாங்க.”

  

சத்யா பேசிக் கொண்டே போக, சக்தி குறுக்கிட்டுப் பேசினாள்!

   

“ஏன் சத்யா, இதுவரைக்கும் உங்க வாழ்க்கைல கெட்டவங்கன்னு யாரையாவது பார்த்திருக்கீங்களா?? அஹல்யாவைப் பத்தி தப்பா பேசுறாங்க, ஆனாலும் அவ நல்லவ. சவீதா அதிகமா ரியாக்ட் செய்றாங்க ஆனால் அவங்களும் நல்லவங்க. இந்த டாக்டர் பேச்சே சரி இல்லை. அவர் ரொம்ப ரொம்ப நல்ல டாக்டர்???”

  

“உண்மையை உண்மைன்னு தானே சக்தி சொல்ல முடியும்? இந்த கேஸை நீங்க க்ளோஸ் செய்யும் போது கெட்டவங்கன்னு யாரையாவது காட்டிடலாம்!”

  

“ஓகே, சத்யா மேடம். இப்போ இந்த டாக்டர் பிரசாத்தை போய் பார்க்க முடியுமா?? அப்பாயின்ட்மென்ட் எதுவும் வேண்டாமா?”

  

“சத்யா இருக்க பயமேன் சக்தி. அப்பாயின்ட்மென்ட் எல்லாம் நான் வாங்கித் தரேன். நீங்க வாங்க.”

  

“நீங்க வாங்கன்னு மரியாதையா பேசுறதை விட்றுவோமா சத்யா? எனக்கு ரொம்ப அன்-ஈசியா இருக்கு?”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.