(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“ஹ்ம்ம்??? கட்டாயம் போய் ஆகனுமா??? சின்ன பசங்க செய்ற அதிகப்பிரசங்கித்தனம் போல தேவையே இல்லாத விஷயத்தை போட்டு கலக்கிட்டு இருக்கோம்னு தோணுது சத்யா!”

  

“தேவையே இல்லாத விஷயமா? அபினவ் அஹல்யாவை லவ் செய்றான் சக்தி. மத்தபடி நான் எதுக்கு அஹல்யாவோட பர்சனல் விஷயத்துல இவ்வளவு அக்கறை காட்டப் போறேன்? ஊருல அஹல்யா பத்தி அடிப்படுற பேச்சு தப்புன்னா அதை தப்புன்னு நிரூபிச்சுக் காட்டுறது, அஹல்யா, அபினவ் இரண்டுப் பேருக்குமே முக்கியம்.”

  

சக்தி நான் உன்னை நம்பவில்லை என்பதுப் போல ஒரு சிரிப்பை உதிர்த்தாள்.

  

“அபினவுக்கு மட்டுமில்லை, உங்களுக்கும் இதை எல்லாம் செய்வேன் சக்தி. அபினவ் கல்யாணம் முடிச்சுட்டு, அடுத்து உங்க கல்யாணம் தான். எதுக்கும் உங்க லேப்டாப் ஸ்க்ரீன்ல இருக்குறதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வச்சுக்குறேன். நாளைக்கு நான் சரியா ஜோடி கண்டுப்பிடிக்கலைன்னு நீங்க சொல்லக் கூடாதே!”

  

“டிடக்டிவ் வேலை கூடவே இப்படி மேட்ச் மேக்கிங் வேலை வேறேயா??? நிறைய சைட் பிஸ்னஸ் வச்சிருக்கீங்க போல இருக்கே?”

  

“ஆமா, உண்மை தான்! ஒன்னை மிஸ் செய்துட்டீங்க. சிரிக்கவே தெரியாம முசுடா இருக்குறவங்களை மாத்தி, பேசி சிரிக்க வைக்க மட்டுமில்லை, நக்கலா பேச வைக்க கூட செய்வேன், தெரியுமா?”

  

“யாரைச் சொல்றீங்க? இன்ஸ்பெக்டர் தென்றல்வாணனையா? அச்சச்சோ பாவம் அவர்?”

  

“அவரு மட்டும் இல்லை கோபத்துல வேலையை ரிசைன் செய்துட்டு ஒரு சின்ன ஊருல வந்து பே ன்னு உட்கார்ந்திருக்க ஒரு மேடமையும் சேர்த்துக்கோங்க.”

  

தன்னை தான் சொல்கிறாள் என்று தெரிந்தாலும் வாய் விட்டு சிரித்தாள் சக்தி.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.