(Reading time: 6 - 12 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

கார் டிரைவிங் தெரியுமா உனக்கு? கிரேட் ரதி! லைசென்ஸ் எல்லாம் கையில வச்சிருக்க தானே?”

  

காரை இலகுவாக கிளப்பி ஒட்டிய பாரதி, கணவன் பக்கம் பார்த்து,

  

கவலையே படாதீங்க, எல்லாம் கை வசம் இருக்கு. காலேஜ் படிக்கும் போதே நான் லைசென்ஸ் வாங்கியாச்சு...” என்றாள்... அதை சொல்லும் போது அவளின் முகம் ஏதோ நினைவில் வாடியது...

  

விவேக்கின் கூர்மையான கண்கள் அதை தவறவிடவில்லை...

   

காலேஜ் என்றதும் எதற்கு முகம் வாடுகிறாள்??? அந்த பாலாவின் நினைவுகளாலா??? இன்னமுமா அவனை நினைத்து அவளுக்கு வருத்தம்??

   

ஒரே நொடியில் விவேக் மனதில் பல கேள்விகள் அணிவகுத்தது... ஆனால், மறு நொடியே, மனதில் எழுந்த கேள்விகளுக்காக தன்னையே கடிந்துக் கொண்டான் விவேக்.

   

அவர்களின் திருமணத்திற்கு முன்பே பாலாவின் மீது எந்த வித பற்றும் இல்லை என்பதை பாரதி சொன்னது அவனின் நினைவில் வந்தது. கல்யாணத்திற்கு முன்பே அப்படி எனும் போது, இப்போது திருமணமாகி அவனுடன் மகிழ்ச்சியோடு வாழ்பவள், கட்டாயம் அதை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க மாட்டாள்! அவனின் மனம் தானாக தெளிவானது!

  

ஆனாலும் பாரதியின் முக மாற்றத்தை அப்படியே விட்டு விட மனம் வராமல்,

   

என்ன விஷயம் ரதி? முகம் ஒரு மாதிரி வாடிப் போச்சு?” என அவளிடமே வினவினான்.

  

அவனை ஆச்சர்யமாகப் பார்த்த பாரதி,

  

இல்லை... லைசென்ஸ் எடுத்த ஞாபகம் வந்தது. எனக்கு டிரைவிங் கத்துக்க அவ்வளவு இன்ட்ரெஸ்ட் இல்லை. அப்பா தான் கம்பல் செய்து எடுக்க வைத்தார். கத்துக்க ஆரம்பித்த

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.