This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
I adore you like a bee loves the flowers. You are my honey, my dream, my everything!
நிலா சொன்னதிலும், அவளின் செய்கைகளிளுமாக, ஹரீஷ் மொத்தமாக மயங்கிப் போனான்!
“நானும் இப்படி ஹெட் ஓவர் ஹீல்ஸ் யாரையும் லவ் செய்வேன்னு நினைச்சதே கிடையாது சுபி. என்னை தலைக் கீழா மாத்திப் போட்டவ நீ மட்டும் தான். அந்த பேஸ்கட்பால் கேம் அப்போ எல்லாம் எனக்கு ஒன்னும் தெரியலை. ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை பார்க்கும் போது எல்லாம் புதுசா என்னவோ ஜிங்குன்னு இருந்தது. நீ அரைகுறை புடவை கட்டி இருக்கும் போது உன்னைப் பார்த்தேன் பாரு...”
ஹரீஷ் அன்றைய நாளின் உணர்வை, இன்று நிலாவிற்கு காட்டுபவனாக அவளின் முகம் எங்கும் முத்தம் பதித்தான். கட்டுக்கடங்காமல் ஓடிய அவனுடைய காதலில் சிக்கி நிலா திக்குமுக்காடிப் போனாள். அவளுக்கு சிறு இடைவெளி கொடுக்க முத்த மழையை நிறுத்தி விட்டுப் பேசினான் ஹரீஷ்.
“அப்போ இருந்து எனக்கு உன்னையே பார்க்குற வேலை தான். ஒரு நாள் ஜில்லுன்னு பேசுவ, ஒரு நாள் வெந்நீரா சுடுவ. அதுக்கும் சுபாஷுக்கும் நான் தப்பா முடிச்சு போட்டுட்டேன்னு இப்போ புரியுது. என் ஆப்-க்கு ஆசை ஆசையா நான் வெண்ணிலான்னு உனக்காக பேரு வச்சா, அப்படி கோபப்பட்ட! ஆனாலும் உன்னை விட்டு என்னால தள்ளி இருக்க முடியலை சுபி. கோவிலுக்கு போயிட்டு நீ வந்த அன்னைக்கு நீ ட்ரஸ் மாத்திட்டு இருப்பன்னு தெரிஞ்சே தான் நம்ம ரூம் உள்ளே வந்தேன். என்னை என்னாலேயே கண்ட்ரோல் செய்ய முடியலை. ஐ லவ் யூ ன்னு நான் சொன்ன உடனே என்னை வெளியே போக சொன்னீயா மனசு எப்படியோ ஆயிடுச்சு!”
“அதுக்கு காரணம் இருக்கு ஹரீஷ்,” – அன்றைய நாள் நடந்தது நினைவில் முகம் சிவக்க சொன்னாள் நிலா.
“அப்படி என்ன காரணம்?”
“உங்க ஆப் நமக்கு மட்டும் பர்சனல் ஆனது கிடையாது. என் பேரை எதுக்கு எல்லோரும் யூஸ் செய்யனும்? அதான் எனக்குப் பிடிக்கலை! மத்தபடி நீங்க என்னைப் பார்க்குற பார்வைக்கு அர்த்தம் புரியாத அளவுக்கு நான் என்ன அசடா? எனக்கு எப்போவோ அது தெரியும். ஆனால்
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.