வருடம் 1982
மெட்ராஸ்
ஜானகியை அழைத்துக் கொண்டு கருணா சென்ற இடம் ஒரு திருமண மண்டபம், அங்கு திருமணம் நடந்துக் கொண்டிருந்தது, அங்கு அவளை அழைத்துக் கொண்டு சென்று முதல் வரிசையில் அவளை அமரவைத்தான்
”இங்க எதுக்காக என்னை கூட்டிட்டு வந்தீங்க“
”முதல்ல உனக்கு சில உண்மைகள் தெரியனும், கல்யாணம் ஆயிடுச்சின்னு சொன்னியே, அது உண்மையா பொய்யான்னு நான் தெரிஞ்சிக்கறதை விட நீ புரிஞ்சிக்கனும், கல்யாணம்னா எப்படியிருக்கும்னு நீ தெரிஞ்சிக்கனும்ல, அதுக்காகத்தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன் பாரு பாரு இதுபோலவா உனக்கு நடந்தது பார்த்து சொல்லு” என சொல்ல அவளும் பார்த்தாள்.
சடங்கு சம்பிரதாயங்கள் நடந்துக் கொண்டிருந்தது, மணமேடையில் மணமகன் மணமகள் இருந்தார்கள், அவளை பார்க்கவிட்டு கருணா அமைதியாக இருந்தான், அவளும் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள், அவளின் ஊரில் இது போன்று மண்டபம் கிடையாது, யாருக்கு திருமணம் என்றாலும் கோயிலில்தான் நடக்கும் ஆனால் இங்கு நடப்பதும் திருமணம்தானே அதுவே அவளுக்கு ஆச்சர்யத்தை தந்தது, அவளும் நடப்பது அனைத்தையும் உன்னிப்பாக பார்க்கலானாள்.
மாங்கல்யத்தை ஆசிர்வாதம் வாங்குவதற்காக ஒருவன் தட்டுடன் வர அதைக்கண்டு மிரண்டாள் ஜானகி கருணாவோ மாங்கல்யத்தை தொட்டுவிட்டு அவளிடம் அதை காட்டி
”இது பேருதான் தாலி இது உன்கிட்ட இருக்கா” என கேட்க அவளோ இல்லை என தலையாட்டினாள். அடுத்து தாலி கட்டும் நேரம் வந்தது, தாலியும் கட்டப்பட்டது, திருமணமும் நல்லபடியாக முடிந்தது, அவளுக்கு ஏக குழப்பம் கருணாவோ அவளிடம்
”பார்த்தியா இதுதான் கல்யாணம், இப்படி நடந்தாதான் கணவன் மனைவிங்கற அடையாளம்
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.