(Reading time: 6 - 12 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

பிறகு எனக்கே ஆர்வம் வந்திருச்சு. வீட்டில எதுக்காக இருந்தாலும் நான் தான் காரை டிரைவ் செய்வேன்... கார் ரிப்பேர் எல்லாம் கூட கொஞ்சம் தெரியும். எதற்கும் இருக்கட்டும்னு கத்து வச்சிருக்கேன்...”  என்றாள்.

  

அப்படியா??? ஆனால், மஹாபலிபுரம் போனப்போ, கார் ரிப்பேர் ஆன மாதிரி ரமேஷ் நடிச்சதை எல்லாம் நீ கண்டுக்கவே இல்லையே?”

  

அப்போ நான் இருந்த மனநிலை வேற விவேக்... அன்னைக்கு எனக்கு ரொம்ப பிடிச்ச கடல் பக்கம் கூட நான் போகலை தானே?”

  

அப்படி என்ன உன் மனசில இருந்தது?"

  

காரில இருந்தப்போ எதை எதையோ நினைச்சுட்டு இருந்தேன். நீங்க ஹாஸ்டல் வரும் போதெல்லாம் சித்ராவை வச்சு திருப்பி அனுப்பினது, உங்களை ஸ்டோர்ஸில் சந்தித்தது, இப்படி எத்தனையோ... கடல் பக்கம் போகாததுக்கு காரணம் வேற...”

  

அது என்ன வேற காரணம்?”

  

அவனின் முன், சேலை நனைய கடல் நீரில் நிற்க சங்கோஜப் பட்டு தான் அலைகளின் அருகில் போகவில்லை, என்று சொல்ல தயங்கினாள் பாரதி... அவளின் முகத்தில் ஏறி இருந்த சிவப்பு நிறத்தைப் பார்த்து, என்னவோ விஷயம் என்று புரிந்துக் கொண்டு,

  

சொல்லு ரதி, அப்படி என்ன காரணம்?” என விடாமல் மீண்டும் கேட்டான் விவேக்.

  

தயக்கத்துடன் அவளின் காரணத்தை சொன்னாள் பாரதி.

  

ஓ! இப்படி எல்லாம் வேற இருக்கா? இந்த வீக் என்ட் நாம இரண்டுப் பேரும் அதே ரிசார்ட் போறோம், என்ஜாய் செய்றோம்...”

  

என்னங்க நீங்க? அதெல்லாம் வேண்டாம்...”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.